அப்படின்னா அந்த நடிகர் திருந்தலையா?: எல்லாமே வெறும் நடிப்பா கோப்ப்பால்

By Siva

சென்னை: பிரமாண்ட இயக்குனரின் படத்தில் இருந்து வாரிசு நடிகரை நீக்கியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

பிரமாண்ட இயக்குனர் எடுக்கும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் வாரிசு நடிகர் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வாரிசு நடிகருக்கு பதில் சிங்கிள் நடிகர் நடிக்க உள்ளாராம்.

இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர் தான் வாரிசு நடிகரின் தற்போதைய படத்தையும் தயாரித்துள்ளார். அந்த படத்தில் நடிகர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பு தரப்பு அவர் மீது அதிருப்தியில் உள்ளதாம்.

வாரிசு நடிகர்

வாரிசு நடிகர்

வாரிசு நடிகரை வைத்து நாங்கள் தயாரித்துள்ள படத்திலேயே அவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால் இரண்டாம் பாகத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டாம் என்று தயாரிப்பு நிறுவனம் தான் பிரமாண்ட இயக்குனரிடம் தெரிவித்து அவரை நீக்க வைத்ததாம்.

படங்கள்

படங்கள்

சேட்டை செய்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை கடுப்பேற்றுபவர் என்ற கெட்ட பெயரை எடுத்தார் வாரிசு நடிகர். ஆனால் தற்போது திருந்தி சமத்துப் பிள்ளையாகிவிட்டதாக கூறப்பட்டது. பெல் இயக்குனரின் படத்தில் நடிக்கும்போது எல்லாம் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்தாராம். அவர் நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்ததை பார்த்து அனைவரும் வியந்தனர்.

புகார்

புகார்

நடிகர் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் திருந்திவிட்டார் என்பதை நம்பித் தான் அவரை புதுப்படங்களில் புக் செய்கிறார்கள். இந்நிலையில் இந்த மெகா தயாரிப்பு நிறுவனம் அவர் மீது கடுப்பில் உள்ளது. இதனால் நடிகரின் கெரியர் பாதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X