»   »  தப்பி ஓடி வந்த மும்தாஜ்!

தப்பி ஓடி வந்த மும்தாஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில், தமிழகத்தைச் சேர்ந்த மத்தியஅமைச்சரின் பேருதவியால், புதுவை கதர்ச் சட்டைக்காரர்களின் பிடியிலிருந்து தப்பிமீண்டுள்ளார் மும்தாஜ்.

சமீபத்தில் காண்டிராக்டர்கள் சில பேர் தங்களுக்கு வேண்டிய மிகப் பெரிய காரியத்தைமுடித்துக் கொடுத்ததற்காக புதுச்சேரியின் மிக முக்கிய அரசியல் தலைவரை பாராட்டமுடிவு செய்தனர்.

இதற்காக பிரமாண்டப் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆடு, கோழி, மீன எனஅசைவ வகைகள் ஒரு பக்கம் அடுக்கப்பட்டிருந்ததாம். உற்சாக பானங்களுக்கும்குறைவில்லையாம். அதை விட முக்கியமாக குலுக்கல் நடிகை மும்தாஜை சிறப்புவிருந்தினராக அழைத்திருந்தனராம்.

மும்தாஜின் குலுக்கல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு கோலாகலமாகநடந்துள்ளது விருந்து. இந்த விருந்தில் அந்த அரசியல் தலைவர் தவிர அவருக்குவேண்டிய சில முக்கிய நண்பர்களும் கலந்து கொண்டனராம்.

உற்சாகமாகப் போய்க் கொண்டிருந்த விருந்தின் முடிவில் அந்த அரசியல் விஐபி(இவர் பிரம்மச்சாரி) அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார்.

ஆனால் அவருடன் வந்த நண்பர்களோ, அண்ணே நாங்க கொஞ்சம் பொறுத்துவாரோம், போய்ட்டு வாங்க என்று தலைவரை அனுப்பி விட்டு மும்தாஜ் பக்கம்பார்வையை விரட்டியுள்ளனர்.

ஆனால் தானும் கிளம்ப எத்தனித்துக் கொண்டிருந்த மும்தாஜுக்கு இந்த பருந்துப்பார்வை பீதியைக் கிளப்பியுள்ளது. அதைக் கண்டுகொள்ளாத அவர்கள், மும்தாஜிடம்சில்மிஷம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பயந்து போன அவர் தனது மொபைல் போன் மூலம் தனக்குத் தெரிந்த தமிழகத்தைச்சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சரை தொடர்பு கொண்டு காப்பாற்றுமாறுகெஞ்சியுள்ளார்.

அதிர்ந்து போன அமைச்சர் உடனே தலையிட்டு, சொல்ல வேண்டிய இடத்தில்சொல்லி, மும்தாஜை சிதறாமல் அப்படியே மீட்டு சென்னைக்குக் கொண்டு வரஏற்பாடு செய்தாராம்.

இந்தத் தகவலை சமீபத்தில் புதுவைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சரிடம் மாநிலகாங்கிரஸ் தலைகள் புகாராக கூறி அந்த தலைவரை பதவியில் இருந்து தூக்குமாறுகோரியுள்ளனராம்.

இந்த மும்தாஜ் சர்ச்சை அந்த ஊர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைகிளப்பியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil