காப்பியா இருந்தா என்ன... நல்லா ஓடுதுல்ல: ‘இசை’ நடிகர் அலட்சியப் பதில்
சென்னை: சமீபத்தில் இசை நாயகன் நடிப்பில் வெளியான பெயர் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் இசை நடிகரின் முதல் படத்தின் தொடர்ச்சி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பகுதி முழுவதும் கொரியப் படம் ஒன்றின் அப்பட்டமான காப்பி என விசயம் தெரிந்த சிலர் சம்பந்தப்பட்டவர்களின் காதில் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் அடுத்த பாகமும் விரைவில் தயாராகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்தப் பேச்சு சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இது தொட்ர்பாக சம்பந்தப்பட்ட நடிகரின் கேட்கப்பட்டதற்கு, ‘அதனாலென்ன படம் நன்றாகத் தானே ஓடிக் கொண்டிருக்கிறது' என அசால்டாக பதிலளிக்கிறாராம்.
சமீப காலமாகவே எல்லாத் தமிழ்ப் படங்கள் குறித்தும் இந்த காப்பியடிச்சான் சர்ச்சை வலுத்து வருகிறது. கமல்ஹாசனின் புதிய படத்தின் மேக்கப்பும் சரச்சையானது. விஜய் படத்தின் போஸ்டர்களும் சர்ச்சையானது. பெரும்பாலான தமிழ்ப் படங்களின் போஸ்டர் ஸ்டைதான் பெருமளவில் சர்ச்சைக்குள்ளாகிறது.
இது ரொம்ப காலமாகவே இருக்கும் சர்ச்சைதான் என்றாலும், சமீபத்தில் அடிக்கடி இதுபோல வெளிநாட்டுப் படங்களைக் காப்பி அடித்து விட்டார்கள் என்று சர்ச்சை கிளம்பி வருவது ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.
ஆனால் திரைத்துறையினர் இதைக் காப்பி என்று கூறவே மாட்டார்கள். இன்ஸ்பிரேஷன் என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள் என்பதுதான் இதில் சுவாரஸ்யமானது.
நம்ம படங்களைப் பார்த்து வெளிநாட்டுக்காரர்கள் இன்ஸ்பயர் ஆகி காப்பி அடிக்கும் நாள் என்று வருமோ....!


Click it and Unblock the Notifications











