தமாஸ் நடிகரின் திடீர் மாற்றத்துக்கு காரணமே இசை பிரபலம் போட்ட போடுதானாம்.. இதுதான் மேட்டரா?
சென்னை: தன்னை பற்றிய பேச்சுகளை எல்லாம் ரகசியமான டீலிங் மூலமாகவே ஆஃப் செய்து விட்டார் அந்த தமாஸ் நடிகர் என கோலிவுட் வட்டாரத்தில் சில மூத்த பத்திரிகையாளர்கள் முணங்கி வருகின்றனர்.
தமாஸ் நடிகர் இனிமேல் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும் என்றும் தேவையில்லாத வேலைகளிலும், மாட்டிக் கொள்ளும் விவகாரங்களிலும் தலையிடக் கூடவே கூடாது என உறுதியாக இருப்பதாக கூறுகின்றனர்.

குறிப்பாக குடும்ப ஆடியன்ஸை இழந்து விடக் கூடாது என்பதற்காகவே இதுவரை செய்யாத பல விஷயங்களை அவர் சமீப காலமாக செய்து வரக் காரணமே அந்த இசை பிரபலம் பண்ண சம்பவம் தான் எனக் கூறுகின்றனர்.
செல்லப்பிள்ளை: சினிமாவில் மட்டுமின்றி பிரபலங்களின் வீடுகளிலும் செல்லப்பிள்ளையாகவே இருந்து வந்த அந்த தமாஸ் நடிகரை பலரும் வீடுகளுக்குள் அனுமதிக்கவே தற்போது பயந்து வருவதாக இண்டஸ்ட்ரியில் பேச்சுகள் புகைந்து வருகின்றன. அந்த அளவுக்கு அந்த இசை பிரபலம் தமாஸ் நடிகரின் பெயரை டேமேஜ் செய்து விட்டார் என்கின்றனர்.
கெட்டுப்போன பெயர்: ஒரு அண்டா பாலில் ஒரு துளி விஷம் விழுந்தாலும், அண்டா பாலே கெட்டு விடும் என்கிற நிலைமை தான் அந்த நடிகருக்கும் ஏற்பட்டு விட்டதாக கூறுகின்றனர். எத்தனையோ நல்ல விஷயங்களை செய்து வந்த நடிகருக்கு இசை பிரபலம் கொடுத்த பேட்டிக்குப் பிறகு தொடர்ந்து வெற்றிகளை கூட ருசிக்க முடியாமல் சரிவை சந்தித்து வருகிறாராம். எல்லாத்துக்கும் காரணம் அந்த இசை பிரபலத்தின் சாபம் தான் என்கின்றனர்.
குடும்பத்துடன் ஹேப்பியாக: தமாஸ் நடிகரும் விரைவில் விவாகரத்து செய்யப் போகிறார் என்கிற அளவுக்கு கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், தனக்கும் தனது மனைவிக்கும் எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்பதை நிலை நாட்டவே குடும்பத்தை தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறார் அந்த தமாஸ் நடிகர் என சினிமா பிரபலங்கள் சிலர் வெளிப்படையாகவே பேசி வருவது தான் தற்போது கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்காக அனல் பறக்கிறது.
சைலண்ட் சம்பவம்: மாஸ் நடிகரை போல தமாஸ் நடிகரும் பெரிய இலக்குடன் சினிமாவில் பயணித்து வரும் நிலையில், தேவையில்லாமல் இதுபோன்ற பெயரைக் கெடுக்கும் வேலைகள் எல்லாம் நடக்கும் என்பதை புரிந்துக் கொண்ட நடிகர் அதிலிருந்து எப்படியெல்லாம் தப்பித்து தன்னுடைய பெயரை மீண்டும் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் பதிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் ஸ்கெட்ச் போட்டு செய்து வருகிறார் என்கின்றனர். ஆனால், நடிகரின் வளர்ச்சியை எப்படியாவது தடுத்து பழி வாங்க வேண்டும் என்கிற நோக்கில் அந்த இசை பிரபலமும் பல வேலைகளை சத்தமே இல்லாமல் செய்து வருவதாகவும் பகீர் கிளப்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











