நடிகையுடன் நெருக்கம்.. கணவர் விட்டுட்டு போயிடுவாரோ.. இசை மனைவிக்கு திடீரென எழுந்த சந்தேகம்.. ஏன்?
சென்னை: தொடர்ந்து சில பிரபல இசையமைப்பாளர்கள் மனைவிமார்களை விவாகரத்து செய்து அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், இன்னொரு இசையமைப்பாளரின் மனைவிக்கும் தனது கணவர் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
மற்ற துறைகளை விட கள்ளக் காதல் கதை அதிகளவில் சினிமாவில் நடைபெற்று வருவது சினிமா பிரபலங்களை நம்பி திருமணம் செய்துக் கொள்ளும் பெண்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ரொம்பவே பாதித்து வருகிறது.

குறிப்பாக மனைவிகளுக்கு வயதாக வயதாக தான் இந்த இன்செக்யூரிட்டி அதிகரித்து வருகிறது என்றும் இளம் நடிகைகளுடன் பிரபலங்கள் நெருங்கி பழகும் போது அவர்களும் அழகில் மயங்கி விழுந்து விடுவதும் வாடிக்கையாக நடைபெற்று வருவதால் தான் இந்த பயம் தொற்றிக் கொள்கிறது என்கின்றனர்.
நடிகையுடன் நெருக்கம்: இதுவரை இல்லாத அளவுக்கு நடிகை ஒருவருடன் கணவர் ரொம்பவே நெருக்கமாக பழகி வருகிறாரோ என்கிற சந்தேகம் மனைவிக்கு ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் பொது வெளியிலும் அடிக்கடி நெருக்கம் காட்டி வருவதை பார்த்து கடுப்பான மனைவி இருவரையும் கண்காணிக்க ஒரு ஆளையும் நியமித்துள்ளார் என்கின்றனர்.
நம்பிக்கையே போச்சு: அந்த நபரும் எந்தவொரு தகவலும் சொல்லாத நிலையில், அவரும் கணவரிடம் காசு வாங்கிக் கொண்டு சைலன்ட்டாக உள்ளாரா என்கிற சந்தேகமும் எழுந்து யார் மீதும் நம்பிக்கையே இல்லாத சூழலில் மனைவியே சமீப காலமாக கணவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று தன்னுடைய காதலை அதிகப்படியாக கணவரிடத்திலும் குறிப்பாக கேமராக்களுக்கு தெரியும் படியும் நெருங்கி பழகும் நடிகை இதை பார்த்தாவது விலகிச் செல்வார் என்றும் செய்து வருகிறார் என்கின்றனர்.
பட புரமோஷனுக்காக: மனைவிக்கு தன்னைப் பற்றிய சந்தேகம் லைட்டா எட்டிப் பார்த்ததையும் அவர் தொடர்ந்து வேவு பார்ப்பதையும் புரிந்துக் கொண்ட இசை அவரை தனிப்பட்ட முறையில் அழைத்து அவரது டவுட்டை க்ளியர் செய்துள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. அந்த நடிகையுடன் நெருக்கம் காட்டியது முழுக்க முழுக்க படத்துக்கான புரமோஷன் தான் என்றும் தான் திருமண உறவில் தவறு செய்ய மாட்டேன். உன்னை விட்டுச் செல்ல மாட்டேன் முழுசா நம்பு என்று மனைவியிடம் சொல்லிவிட்டார் என்கின்றனர். சிலர் ஏமாற்றுவதால் பலருக்கும் இதுபோன்ற கஷ்டங்கள் ஏற்படும் சூழல்களும் உருவாகியுள்ளன என்கின்றனர்.


Click it and Unblock the Notifications