For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இதைத்தான் இவ்வளவு நாளா ஒட்டிட்டு இருந்தீங்களா? பிரபலத்தின் கேள்வியால் அப்செட்டான இயக்குநர்!

  By Staff
  |

  சென்னை: பான் இந்தியா, பிரம்மாண்டம் என பில்டப் கொடுத்து வந்த அந்த காவிய படத்தை சமீபத்தில் கலாய்த்து தள்ளி இருக்கிறாராம் அந்த இசை பிரபலம்.

  பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படும் அந்த மல்டி ஸ்டாரார் காவியத்திற்கு என்ன இப்படியொரு நிலை ஏற்பட்டு விட்டது என கோடம்பாக்கம் முழுக்கவே இதுதான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

  படத்தை ஆரம்பித்ததில் இருந்தே அந்த இயக்குநர் மீது யாருக்குமே நம்பிக்கை வராத நிலையில், அந்த இசை பிரபலமே இப்படியொரு வார்த்தை சொல்லி இருப்பது பிசினஸ் ரீதியாக பெரும் பின்னடவை ஏற்படுத்தி உள்ளதாம்.

  உண்மையான நட்பு... நடிகர் கார்த்தி செய்த சிறப்பான செயல்... நெகிழ்ந்த யுவன்! உண்மையான நட்பு... நடிகர் கார்த்தி செய்த சிறப்பான செயல்... நெகிழ்ந்த யுவன்!

  இது என்ன கேம்

  இது என்ன கேம்

  தமிழ் சினிமாவின் அடையாளமாக உருவாக்கப்பட வேண்டிய அந்த படத்திற்கு இயக்குநர் சுருக்கமாக வைத்த டைட்டிலை பார்த்த உடனே இது என்ன கேம் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். மேலும், அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட போஸ்டர்களை எல்லாம் பார்த்து ஃபேன் மேட் போஸ்டர்களே இதை விட சூப்பரா இருந்துச்சு என அந்த இயக்குநரின் அத்தனை முயற்சிகளையும் வறுத்து எடுத்து விட்டனர்.

  விட்டா போதும்

  விட்டா போதும்

  தெரியாத்தனமா இவர் கிட்ட வந்து சிக்கிட்டோமேன்னு இருந்த அந்த முக்கிய நடிகர் விட்டா போதும் என பேக்கப் சொன்னவுடன் கெட்டப்பை மாற்றிக் கொண்டு அடுத்த படத்தையே அதிரடியாக நடித்தும் முடித்து விட்டாராம். இந்நிலையில், மறுபடியும் பட்டி டிங்கரிங் வேலைக்கு அவரை அழைப்பார்களோ என்கிற அச்சத்தில் நடிகர் ஒரு பக்கம் புலம்பி வருகிறாராம்.

  வெளிநாடு டூர்

  வெளிநாடு டூர்

  தனது படத்தை புரமோட் செய்ய அந்த இசை பிரபலம் ஜாலியாக வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வருகிறாராம். ரிலீஸ் தேதியை அறிவித்த நிலையில், படத்திற்கான இசை பணியை அவர் இன்னமும் முடிக்கவே இல்லையே என அழுத்தம் கொடுத்த நிலையில் தான் படத்தை பார்த்து கழுவி ஊற்றி விட்டாராம் அந்த இசை பிரபலம்.

  நல்லா இல்லை

  நல்லா இல்லை

  எத்தனையோ படங்களுக்கு இசையமைத்த அவருக்கு இப்படி ஸ்லோவாக நகரும் காட்சிகளுக்கு என்ன மியூசிக் போடுறதுன்னே ஒரே குழப்பமாகிடுச்சாம். ரொம்ப லேகா இருக்கு, கொஞ்சம் ரீ ஷூட் பண்ணிட்டு வந்தா நல்லா இருக்கும் என கத்தியை இயக்குநர் பக்கம் அப்படியே திருப்பி விட மறுபடியும் ஷூட்டிங்கா? செலவு எகிறிடுமே? என தயாரிப்பாளர் குளிர் ஜுரத்தில் நடுங்கி வருவதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

  தள்ளிப் போகும்

  தள்ளிப் போகும்

  இசை பிரபலம் இயக்குநர் காதுக்கு மட்டும் சொன்ன ரகசியம் எப்படியோ வெளியே கசிந்து விட்ட நிலையில், மீண்டும் ரீ ஷூட் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு இயக்குநர் தள்ளப் பட்டிருக்கிறார் என்றும், இதன் காரணமாக குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாவது சந்தேகம் தான் என்றும் ஏகப்பட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னமும் முடியாத நிலையில், புரமோஷன் பணிகளை ஆரம்பிக்கவும் லேட்டாகும் என்கின்றனர்.

  English summary
  Music Composer strong criticism about the upcoming mega budget epic film shocks Big Director. Also he suggests a reshoot for some lagging scenes.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X