குடியை கெடுத்துட்டான்.. மனைவி செய்த துரோகத்தை மறக்க முடியாமல் தவிக்கும் பிரபலம்!

By Staff

சென்னை: சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருக்கிறார் அந்த பல்க் இசையமைப்பாளர். எப்போதும் அமைதியாகவும், அன்பாகவும் பேசக்கூடிய இவர், கடந்த சில ஆண்டுகளாக மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். காதல் மனைவியை விவகாரத்து செய்து விட்டு, இரண்டு மகளுடன் பிரிந்து வந்து இன்னும் அந்த காயத்தில் இருந்து மீளவே முடியாமல் தவித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு காலத்தில் ஏணிப்படியாக இருந்தார் பல்க் இசையமைப்பாளர். அந்த நடிகரின் படத்திற்கு இசையமைக்க பல இசையமைப்பாளர் தயங்கிய போது, இவர் இசையமைத்து பல வெற்றி பாடல்களை கொடுத்து அந்த நடிகரை உச்சாணிகொம்பில் ஏற்றிவிட்டார். இதனால், இருவரும் குடும்ப நண்பர்களாகவெ மாறிவிட்டனர். ஆனால், காலம் செய்த சதியால் இசையமைப்பாளர், நடிகரும் பிரிந்து விட்டனர். அதற்கு என்ன காரணம் என வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்தது.

Gossip tamil cinema kishu kishu

மனைவி செய்த துரோகம்: பல ஆண்டுகள் மனவேதனையோடு மனதில் போட்டு புதைத்து வைத்து இருந்த அந்த ரகசியத்தை அந்த இசையமைப்பாளர் மனதில் இருந்த வலியை ஒரு பேட்டியில் போட்டு உடைத்தார். அதில், அண்ணா அண்ணானு சொல்லி என் குடியை கெடுத்துவிட்டான் என்றார். அந்த நடிகரை வீட்டிற்குள் விட்டது தவறு என மனவேதனையில் புலம்பினார். அதன் பின் தான் அந்த பல்க் இசையமைப்பாளர் மனைவியை விவகாரத்து செய்ய இந்த நடிகர் தான் காரணம் என்பது தெரிந்தது. இதனால், ஒட்டுமொத்த மீடியாவில் அந்த நடிகரை கடுமையாக விமர்சித்தனர்.

கர்மா சும்மா விடாது: அதன் பின் அந்த பஞ்சாயத்து ஓய்ந்து, பல்க் இசையமைப்பாளர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் முதல் மனைவியும், நம்பிய நண்பன் செய்த துரோகத்தை மறந்துவிட்டார் என்று பார்த்தால், இன்னும் அவர் அந்த மனவேதனையில் இருந்து வெளியேவர முடியாமல் தவிர்த்து வருகிறார். துரோகம் செய்தவன் கண்முன்னாடியே குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கான் ஆனால், இரண்டாம் திருமணம் செய்து கொண்டும் என் வாழ்க்கை வேதனையோடு நகர்கிறதே என்று தினமும் புலம்புகிறார். ஆனால், கர்மா யாரையும் சும்மாவிடாது என இணையத்தில் அவ்வப்போது முதல் மனைவியும், நடிகரையும் மறைமுகமாக தாக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X