வெளிநாட்டில் இசை கச்சேரி மட்டுமில்லை.. பாடகியுடன் அந்த கச்சேரியும் நடத்தும் இசையமைப்பாளர்
சென்னை: வெளிநாட்டுக்கு அடிக்கடி பறக்கும் இசையமைப்பாளர் இசை கச்சேரியை முடித்த பிறகு பாடகியுடன் அந்த கச்சேரியும் நடத்திவருகிறாராம்.
ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிட்டார் ப்பா என பலரும் சொல்வார்களே. அதுமாதிரிதான் அந்த இசையமைப்பாளரும். முதல் படத்தில் போட்ட ஒரே ஒரு பாடல்தான். அவரை உலகம் எங்கும் கொண்டு போய் சேர்த்தது. அந்தப் பாடலுக்கு பிறகு யாரு ப்பா இவர் என பலரும் திரும்பி பார்த்தனர். அடுத்தடுத்து கிடைத்த பட வாய்ப்புகளை பயன்படுத்தி தரமான பாடல்களை கொடுத்துக்கொண்டிருந்தார் அவர்.

ஒரு கட்டத்தில் அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஒரு காலத்தில் எப்படி மூத்த இசையமைப்பாளருக்காக இயக்குநர்கள் ஸ்டூடியோ வாசலில் காத்திருக்க ஆரம்பித்தனரோ அதேபோல் இவருக்கும் காத்திருக்க ஆரம்பித்தனர். தொட்டதெல்லாம் ஹிட்டானதால் முன்னணி ஹீரோக்களும் இளம் இசையமைப்பாளரின் இசையே வேண்டும் என அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதனால் இசையமைப்பாளர் ஸ்டூடியோவில் ஒரே மழைதான். உச்ச நடிகர் முதல் எக்ஸ்பெரிமெண்ட் நடிகர்வரை அனைவருமே இப்போது அவர் பக்கம் சாய்ந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் தரமான சம்பவமாக செய்துவருகிறார் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர். இதன் காரணமாக அவர் இசையமைத்த படங்கள் மாதா மாதம ரிலீஸாகும் சூழ்நிலையும் நிலவிவருகிறதாம்.
முக்கியமாக தனக்கான மவுசு ஏற ஏற தன்னுடைய சம்பளத்தையும் ஏற்றிவிட்டாராம். அதன்படி இப்போது அவர் இரட்டை இலக்க கோடிகளில் வாங்கிக்கொண்டிருக்கிறாராம். எப்படி அவருக்கு புகழ்ச்சி கிடைக்கிறதோ அதே அளவு சர்ச்சைகளும், விமர்சனங்களும் அவரை சுற்றுவது இயல்புதான். உயர்தர போதை பழக்கத்துக்கு அவர் எப்போதோ அடிமையாகிவிட்டார் என ஒரு தகவல் சில வருடங்களுக்கு முன்பு கோலிவுட்டில் பரபரத்தது.
போதை பழக்கம் மட்டுமின்றி பெண்கள் பழக்கத்திலும் அவர் அடிமைதானாம். ஒரு பாடகியுடன் இருந்த ஃபோட்டோக்கள் வெளியாகி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதேபோல் உச்ச நடிகர் வீட்டிலும் இசையமைப்பாளரால் சில வருடங்களுக்கு முன்பு பஞ்சாயத்து எழுந்ததாகவும் ஒரு பேச்சு ஓடியது. ஆனால் பழையதெல்லாம் மறந்து இப்போது ராசியாகிவிட்டார்கள் என்பது வேறு கதை.
தற்போது இசையமைப்பாளரை வைத்து இன்னொரு கிசுகிசுவும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது சமீபகாலமாக தான் இசையமைக்கும் படங்களில் ஒரு வடநாட்டு பாடகியை தவறாமல் கமிட் செய்கிறார் இசையமைப்பாளர். ஆரம்பத்தில் இசையில் தொடங்கிய பயணம் போகப்போக இச்சையாக மாறிவிட்டதாம். இதையெல்லாம் கவனித்த நண்பர்களும், குடும்பத்தினரும் சரி ஸ்டூடியோவுக்குள்ளேயே இந்த பழக்கம் நின்றுவிடும் என்று கணித்தார்களாம். ஆனால் இப்போது இருவரது பழக்கமும், நெருக்கமும் கடல் தாண்டி பறந்திருக்கிறது.
அந்த இசையமைப்பாளர் சமீபமாக வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்துவதை அதிகப்படுத்தியிருக்கிறார். அதற்கு காரணம் வெறும் பணம் மட்டும் இல்லையாம். இசை கச்சேரியை சாக்காக வைத்து பாடகியையும் அழைத்துக்கொண்டு ஹனிமூன் செல்வது போல்தான் செல்கிறாராம் அவர். எங்கெல்லாம் கச்சேரி நடத்துகிறாரோ அங்கு தனக்கு ரூம் போடும்போது தன் ரூமுக்கு அருகிலேயே பாடகியை வைத்துக்கொள்கிறாராம் இசையமைப்பாளர். இசை கச்சேரியை முடித்ததும் பாடகியும், இசையமைப்பாளரும் ஒரே ரூமில் தங்கி வேறு கச்சேரியையும் நடத்திக்கொண்டிருக்கிறார்களாம். இருவரும் சேர்ந்து நடத்தும் கச்சேரியின் சத்தம்தான் தற்போது கோலிவுட்டில் சத்தமாக கேட்டுக்கொண்டிருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











