பொம்பள சோக்கு கேட்குதா.. அவரை கழட்டி விட்டது போல தமாஸ் நடிகரையும் கழட்டி விட்டாராம் புயல்?

By Staff

சென்னை: பல ஆண்டுகள் தனது இசையில் வெளியான பாடல்கள் எல்லாம் வெற்றியடைய காரணமானவரையே பலான விவாகரத்தில் பெயர் அடிபட்டவுடன் அப்படியே கழட்டி விட்டு விட்டார் அந்த புயல். இந்நிலையில், அதே போல இன்னொரு இசையமைப்பாளருக்கே துரோகம் செய்த நடிகருடன் இனிமேல் பயணிக்கப் போவதில்லை என்கிற முடிவுக்கும் அவர் வந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

பல ஆண்டுகளாக எந்தவொரு கிசுகிசுவிலும் சிக்காமல் தான் உண்டு தன் பொழப்பு உண்டு என சாதனை படைத்து வருகிறார் அந்த புயல். ஆனால், இந்த ஆண்டு தெரியாத்தனமா சென்னை வாசிகளை சந்தோஷத்தில் ஆழ்த்த நினைத்து மிகப்பெரிய சங்கடத்தில் சிக்கிக் கொண்டார்.

Music Director also avoids young hero for his recent bad image?

அந்த விஷயத்தில் ஸ்ட்ரிக்ட்: எத்தனை ஆண்டுகள் ஒன்றாக வேலை செய்தாலும் பெண்கள் விஷயத்தில் யாருடைய பெயராவது தவறாக சிக்கிடுச்சுன்னா அதன் பின்னர் அவர்களுடன் சங்காத்தமே வைத்துக் கொள்ள மாட்டார் அந்த புயல் என்கின்றனர். அந்த விஷயத்தில் மட்டும் அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்றும் சீரியஸாக அந்த விஷயத்தை கையாண்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

கழட்டி விட்டுட்டாரு: பல ஆண்டுகள் உடன் பணியாற்றியவர் மீது பெரிய புகார் எழுந்த நிலையில், இதற்கு மேல் அவர் தேவையே இல்லை என சில முன்னணி இயக்குநர்கள் கோரிக்கை வைத்தும் நான் வேணும்னா அவரை இனிமேல் மறந்துடுங்க என்றே சொல்லி விட்டாராம்.

சிக்கலில் நடிகர்: அதே போன்ற விவகாரத்தில் தற்போது தமாஸ் நடிகரும் சிக்கி உள்ள நிலையில், அவரது படத்திற்கு இசையமைத்துள்ள புயல் நிகழ்ச்சிக்கு வருவாரா? என்கிற கேள்வியே எழுந்து நிற்கிறது என ஷாக் கொடுக்கின்றனர். இனிமே அந்த நடிகரின் படங்களுக்கு இசையமைக்கவே மாட்டேன் என்றும் அவர் சொல்லி விட்டதாகவும் கடைசியாக நடக்க உள்ள நிகழ்ச்சிக்கு வருவாரா என்பதே சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர்.

இசையமைப்பாளருக்கு துரோகம்: சக இசையமைப்பாளருக்கு அந்த நடிகர் துரோகம் செய்தது இவரை ரொம்பவே மனதளவில் காயப்படுத்தி விட்டது என்கின்றனர். அதனால் தான் அவருடைய படத்துக்கும் பெரிதாக ஈடுபாடு கொடுக்காமல் இருந்து விட்டாராம். மேலும், இனிமேல் அந்த நடிகருடன் தொடர்ந்து எதிர்காலத்தில் பயணிக்க போவதில்லை என்கிற முடிவுக்கும் புயல் வந்து விட்டதாக பகீர் கிளப்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X