திருட்டுக் கதையா.. இசையமைப்பாளர் இயக்கிய படத்துக்கு சிக்கல்.. பெருசாகும் பஞ்சாயத்து!
சென்னை: ஹீரோவாக நடித்து வரும் அந்த பிரபல இசையமைப்பாளர் இந்த முறை இயக்குநராகவும் மாறி இயக்கிய படத்தின் கதை திருட்டுக் கதை என்கிற பஞ்சாயத்து ஆரம்பித்துள்ளது.
படங்கள் ஓடலைன்னாலும், ரிலீஸே ஆகலைன்னாலும் இவருக்கு மட்டும் எப்படி அடுத்த அடுத்த படங்கள் வந்துட்டே இருக்கு என்றே ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளரே இயக்க போகிறார் என்கிற அறிவிப்பு வெளியானதில் இருந்து அந்தளவுக்கு இவரிடம் கதை ஞானம் இருக்கா என யோசித்த சினிமா பிரபலங்கள் பலரும் பேசி வந்த நிலையில், தற்போது திருட்டுக் கதை மேட்டர் லீக்கானதும் இசையமைப்பாளரை பங்கமாக கலாய்த்து வருகிறார்களாம்.

பாவம் பார்த்த பலரும்
அந்த நடிகருக்கு திடீரென இப்படி ஆகிடுச்சே என சமீபத்தில் பலரும் பாவம் பார்த்த நிலையில், தற்போது கதையே மாறி அந்த நடிகர் மீது ஏகப்பட்ட பழிகளை சுமத்தத் தொடங்கி விட்டார்களாம். பல தயாரிப்பாளர்கள் படத்தில் அந்த நடிகர் நடித்த பல படங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், நடிகரின் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் மட்டும் விரைவில் வெளியாக போகிற வயிற்றெரிச்சல் தான் காரணம் என்கின்றனர்.

திருட்டுக் கதை
இசையமைப்பாளராக இருக்கும் போதே ஏகப்பட்ட ட்யூன்களை திருடிப் பாட்டு போட்டு வந்தார் என பேசப்பட்ட அந்த இசையமைப்பாளர் திடீரென இயக்குநராக மாறிய நிலையில், அவர் இயக்கி உள்ள கதையே திருட்டுக் கதை என்கிற புதிய பஞ்சாயத்து தற்போது கோடம்பாக்கத்தையே உலுக்கி உள்ளது.

அந்த நடிகரின் அப்பா
சமீபத்தில் படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாக இசையமைப்பாளர் சில காட்சிகளை வெளியிட்ட நிலையில், இந்த கதை என் கதை சார் என ஒரு இயக்குநர் பிரச்சனையை கிளப்பி உள்ளாராம். மேலும், புரட்சி நடிகரின் அப்பாவிடம் இந்த கதை பற்றி அந்த இயக்குநர் ஏற்கனவே சில ஆண்டுகளாக பேசி வரும் நிலையில், இந்த கதை எப்படி அந்த இசையமைப்பாளருக்கு கிடைத்து படமாக்கப்பட்டது என்கிற பஞ்சாயத்து வெடித்துள்ளது.

சீரியல் கதை
ஒரு பக்கம் இளம் இயக்குநர் தனது கதை என சொல்லி வரும் இதே கதையை வைத்து ஒரு பிரபல சீரியலே ஓடிக் கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து காப்பி அடித்துத் தான் அந்த இசையமைப்பாளர் இந்த படத்தை உருவாக்கி தத்துவங்களை பேச ஆரம்பித்துள்ளார் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

பணம் சம்பாதிக்க
பணத்தை பற்றிய கதையை எடுத்துக் கொண்டு பல தத்துவங்களை சொல்லி வரும் அந்த இசையமைப்பாளர் எடுத்து வைத்திருக்கும் படமே திருட்டுக் கதை என சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், பணம் சம்பாதிக்க என்ன எல்லாம் செய்யுறாரு பாருங்க என கோடம்பாக்கத்தில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களே அந்த இசையமைப்பாளரை பற்றி படு கேவலமாக பேசி வருவதாக கூறுகின்றனர்.

சமீபத்திய சர்ச்சை
இதில், சமீபத்தில் அந்த இசையமைப்பாளர் சிலருக்கு ஆதரவாக பேசியதும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில், இசையமைப்பாளரை இந்த விஷயத்தில் மேலும், பலர் வெளுத்து வாங்கி வருகின்றனர். ஆனால், படம் வந்தால் இந்த விஷயங்கள் எல்லாம் பறந்தே போயிடும் என இசையமைப்பாளர் படத்தை சொன்ன நேரத்தில் வெளியிடும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











