அந்த மியூசிக் மேனோட மொத்த வால்யூமையும் புடுங்கி விட்ட டைரக்டர்.. கடைசியில நிலைமை இப்படி ஆகிடுச்சே!
சென்னை: படத்தின் டைட்டிலையே பாடல் வரிகளாக மாற்றி வாயாலையே ட்யூன் போட்டு பல வருடங்களாக ஓட்டிக் கொண்டு பெரிய பெரிய அவார்ட் எல்லாம் வாங்கி ஹீரோயின்களுடன் ஜாலியாக கொஞ்சி பேசி கூலாக இருந்த மியூசிக் மேனை அந்த டைரக்டர் மொத்தமாக முடித்து விட்டதாக இண்டஸ்ட்ரியில் பேசிக் கொள்கின்றனர்.
இதுபோன்ற பிரச்சனைகளில் அதிகம் நடிகைகள் மட்டுமே சிக்கி ராசி இல்லாத நடிகைகள் என முத்திரைக் குத்தப்பட்டு ஒதுக்கப்படுவார்கள். ஒரு சில ஹீரோக்களும் குடி போதையில் ஷூட்டிங் வராமல் கொஞ்ச வருஷம் கழித்து என் வாழ்க்கையை மேனேஜர் கெடுத்தான். அந்த ஹீரோ கெடுத்தான் என அடுத்தவர் மீது பழியை போடுவார்கள்.

ராசி இல்லாதவர் என்பதை தாண்டி திறமை இல்லாதவர் என்றே மியூசிக் மேனை தற்போது திரையுலகம் முத்திரை குத்திய நிலையில், கைவசம் இருந்த 3 பட வாய்ப்புகள் அம்பேல் ஆகிவிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காப்பி அடிக்கும் இசையமைப்பாளர்கள்: சில இசையமைப்பாளர்கள் தெரிந்தே காப்பியடித்து செம பிஸியான மியூசிக் டைரக்டர்களாக வலம் வருகின்றன்ர். சிலர் ஒரே ட்யூனை மாற்றி மாற்றிப் போட்டு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கி தான் தான் இசை மேதை என சொல்கின்றனர். பல கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் படம் நஷ்டமடைந்த பின்னர் தான் இவர்களின் தவறுகளை சுட்டிக் காட்ட ஆரம்பிக்கின்றனர்.
மாட்டிக்கினாரு ஒருத்தர்: ரொம்ப வருடங்களாகவே தனக்கு தெரிந்த இசையை போட்டு ஒப்பேற்றிக் கொண்டிருந்த அந்த லவுட் மியூசிக் டைரக்டரின் வால்யூமை தற்போது ஒரே படத்தில் அந்த டைரக்டர் ஆஃப் செய்து விட்டார் என்பது தான் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இதற்கு முன்பு வரை இப்படி எந்த படத்துக்கும் நடக்காத நிலையில், ஹீரோவை குஷிப்படுத்த மியூசிக் டைரக்டர் பார்த்த வேலை அம்பலமான நிலையில், அவருக்கு பலத்த அடி விழுந்துள்ளதாக கூறுகின்றனர்.
எல்லாமே போச்சு: ஹீரோக்களுக்கு ஓவர் பில்டப் கொடுத்து வந்த மியூசிக் மேனோட நிலைமைக்கு முக்கிய காரணமே அந்த டைரக்டரின் சரியான திட்டமிடல் இல்லாத தலைமை தான் என்று கூறி புலம்பினாலும், தற்போது மியூசிக்கே வேஸ்ட் என ஒவ்வொருத்தராக பந்தாட கைவசம் இருந்த 3 படங்கள் காலியாகி தற்போது ஃபீல்ட் அவுட் ஆகும் நிலைக்கு வந்துவிட்டார் என்கின்றனர். ஏற்கனவே ஒரு பிரபல மியூசிக் டைரக்டர் இதே போல ஃபீல்ட் அவுட்டாகி தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











