»   »  மூக்கு பொடப்பா இருந்தா கோக்கு மாக்காதான் யோசிக்கத் தோணுமோ!!

மூக்கு பொடப்பா இருந்தா கோக்கு மாக்காதான் யோசிக்கத் தோணுமோ!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கிசுகிசு - Gossip time!

வெற்றிகரமான இசையமைப்பாளராக இருக்கும்போதே முழுநேர நடிகராக களம் இறங்கியவர். யார் அவர்? என்று செய்தியைப் படித்து முடிக்கும்போது யோசிக்க வேண்டாம் என்பதற்காக- இது ஜி வி பிரகாஷ் பற்றிய செய்தி அல்ல. மூன்று எழுத்தில் வந்த முதல் படத்திலேயே நம்பிக்கையான வரவாகப் பார்க்கப்பட்டவர்!

தனக்கான களம் இதுதான், இதுபோன்ற கதாபாத்திரங்கள்தான் செட் ஆகும் என்பதைப் புரிந்துகொண்டு, அப்படியான கதைகளுக்கே முன்னுரிமை கொடுத்து அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். யார் டெக்னிஷியனாக இருந்தாலும் அவர் நடிக்கும் படத்திற்கு அவர்தான் ஒன்மேன் ஆர்மி! அவர் விரும்புகிறபடிதான் எல்லாமே நடக்கணும்.. இதற்கு ஒப்புக்கொண்டால்தான் வாய்ப்பு கிடைக்கும். அவரின் இந்த முடிவு சாதகமாக இருந்ததைவிட பாதகமாக அமைத்ததுதான் சோகம் என்பதற்கு சமீபத்தில் அரசியல் தலைவரின் பெயரில் வந்த படமே வரலாற்று சாட்சி.

Music Director's attrocity

கைவசமுள்ள ஒரு படமும் முடிந்து அடுத்த மாதம் திரைக்கு வரப்போகிறது. அதனால் அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கிவிட்டார். அதற்கான நடிகர்களை தேடிக்கொண்டிருக்கிறார். 'உடனே புது முகங்களுக்கு வாய்ப்பு உண்டா பாஸ்?' கேட்டுவிட்டார்கள். இது வேற லெவல்! சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கும் அனுபவம் வாய்ந்த நடிகர்ளுக்கு போன் போட்டு, "எங்களது அடுத்த படத்தில் உங்களை நடிக்க வைக்காலாம்னு இருக்கோம். சார் ஒரு ஒர்க் ஷாப் நடத்துவார். அதில் நீங்கள் எப்படி நடிக்கிறீங்கன்னு பார்த்துட்டு அதுக்கப்பறந்தான்... நீங்க ஓக்கேவா இல்லையான்னு முடிவு சொல்லுவோம். எப்பவ வர்றீங்க?!" என்று எதிர் தரப்பில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக்கூட கேட்காமல் அழைப்பு விடுகிறாராம் அவரது அசோசியேட் டைரக்டர்!

மூக்கு பொடப்பா இருந்தால், இப்படியெல்லாமா யோசிக்கத் தோணும்!?

Read more about: gossip, கிசுகிசு
English summary
That music director turned hero is now calling senior actors for his work shop

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil