தமாஸ் நடிகரை முறைத்த இசையமைப்பாளர்.. இண்டஸ்ட்ரியில் இருந்தே இருட்டடிப்பு செய்த நடிகர்.. என்ன ஆச்சு?

By Staff

சென்னை: தமாஸ் நடிகரை டாப் நடிகர் ரேஞ்சுக்கு வளர்த்து விட தனது பாடல்கள் மூலம் பாலமாக இருந்த அந்த இசையமைப்பாளர் உடன் சமீபத்தில் நடந்த தகராறு பெரிய பஞ்சாயத்தை கிளப்பியது.

அண்ணன் தம்பியாக பழகி வந்த இருவரும் ஜென்ம விரோதிகள் ஆன நிலையில், எல்லை மீறி நடிகரை அசிங்கப்படுத்திய அந்த இசையமைப்பாளரை இண்டஸ்ட்ரியை விட்டே ஒதுக்கி வைக்கும் அளவுக்கு பலே வேலைகளை பார்த்துள்ளார் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

Music Director total washout from cine industry due to that Comedy Hero?

கோலிவுட்டில் டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து வரும் தமாஸ் நடிகருக்கு ஏகப்பட்ட செல்வாக்கு அதிகரித்து இருப்பதாலே அந்த இசையமைப்பாளருக்கு இந்த நிலைமை என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இசையால் கிடைத்த பலம்: எந்தவொரு நடிகராக இருந்தாலும் அந்த நடிகர் நடிக்கும் படங்களின் பாடல்கள் ஹிட் ஆனால் தான் ரசிகர்களிடம் வெகு விரைவாக அந்த நடிகர் கனெக்ட் ஆக முடியும். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவரும் பாடல்களை தொடர்ந்து நடிகர்கள் கொடுத்து வரக் காரணமே அது தான்.

ஆரம்பத்தில் சாதாரண நடிகராக வலம் வந்த அந்த தமாஸ் நடிகர் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ஏற்றி விட்டதில் இந்த இசையமைப்பாளருக்கு பெரும் பங்கு உள்ளது.

Music Director total washout from cine industry due to that Comedy Hero?

இருவருக்கும் முட்டிக்கிச்சு: கடைசியாக சில படங்களில் அந்த இசையமைப்பாளருடன் சேர்ந்து பணியாற்றிய நிலையில், படம் பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், நடிகருக்கும் இசையமைப்பாளருக்கும் கடும் சண்டை வெடித்தது என்கின்றனர்.

இதற்கு மேல் உன் மூஞ்சிலே நான் முழிக்கவே மாட்டேன் என இருவரும் வெறுத்து ஒதுங்கும் அளவுக்கு சினிமாவை தாண்டியும் சில பர்சனல் பகை ஏற்பட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இசையமைப்பாளரை காலி பண்ண நடிகர்: பொதுவாக இரு பிரபலங்களுக்கு நடுவே பிரச்சனை வெடித்தால் இருவரும் ஆளுக்கொரு பக்கமாக பயணிப்பார்கள். ஆனால், இந்த இருவருக்கும் இடையே வெடித்த பிரச்சனைக்கு பிறகு இசையமைப்பாளரை டோட்டல் வாஷ் அவுட் செய்யும் முயற்சியில் நடிகர் இறங்கி வேலை செய்துள்ளார் என அதிர்ச்சி தகவல்கள் கசிந்துள்ளன.

பெரிய அளவில் முன்னேறி வந்த அந்த இசையமைப்பாளர் தமாஸ் நடிகரை பகைத்துக் கொண்டதன் விளைவாக பட வாய்ப்புகளே இல்லாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் எனக் கூறுகின்றனர்.

இப்படியொரு பக்கம் பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அந்த இசையமைப்பாளரின் பர்சனல் விஷயங்கள் தான் அவர் ஃபீல்ட் அவுட் ஆக காரணம் என்றும் அந்த தமாஸ் ஹீரோவுக்கும் இசையமைப்பாளரின் தற்போதைய நிலைக்கும் எந்தவொரு சம்பந்தம் இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் உண்மை சீக்கிரம் வெளிவந்தே தீரும் என சினிமா வட்டாரத்தில் பலத்த பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X