»   »  'அவரைப்போல இருக்கலாமே'.. இசை நடிகருக்கு குவியும் அறிவுரை!

'அவரைப்போல இருக்கலாமே'.. இசை நடிகருக்கு குவியும் அறிவுரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டைக் குதிரையில் சவாரி செய்துவரும் இசையமைப்பாளரை கோலிவுட் இயக்குநர்கள் ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளனராம்.

பள்ளிக்கூடம் போகும் வயதிலேயே இசையமைக்க வந்து அதில் வெற்றிக்கொடியும் நாட்டியவர் அந்த இசையமைப்பாளர். இதனால் இளம் வயது இசையமைப்பாளராக இருந்தாலும் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இவரை ஒப்பந்தம் செய்ய இயக்குநர்கள் தயங்கவில்லை.

Music Hero no Concentrate Movie Songs

இசையை மட்டும் கவனித்து வந்த இவரை நடிப்பு ஆசை ஆட்டிப் படைக்க இசை, நடிப்பு என இரட்டைக் குதிரை சவாரியை மேற்கொண்டார்.

நடித்து வெளியான படங்கள் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு கைநிறைய படங்களில் நடித்து வருகிறார். இதனால் முன்பு போல இவரின் பாடல்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளிவந்த அந்த இரண்டெழுத்துப் படத்தில் கூட பாடல்கள் அந்தளவு இல்லை என்று வெளிப்படையாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதுதவிர இசையை மட்டும் கவனித்தால் நன்றாக இருக்கும் என்று அவரின் அபிமானிகளும் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

மேலும் இதேபோல நடிகரான இன்னொருவர் போல நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைக்கலாமே? என்ற அறிவுரைகளுக்கும் பஞ்சமில்லையாம்.

ஆனால் இவற்றையெல்லாம் இசையமைப்பாளர் கண்டு கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிப்பதால், இவருடன் பணியாற்றி வந்த இயக்குநர்கள் தற்போது புதிய இசையமைப்பாளர்களை தேடிப் போக ஆரம்பித்துள்ளனராம்.

English summary
Sources said the Young Music Hero No Concentrate in his movie Songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil