»   »  விஜய் ரேஞ்சுக்கு கதை ரெடி பண்ணுங்க... இது இசை வாரிசு அட்ராசிட்டி!

விஜய் ரேஞ்சுக்கு கதை ரெடி பண்ணுங்க... இது இசை வாரிசு அட்ராசிட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆரம்பத்தில் இரண்டு ஹிட்களைக் கொடுத்துவிட்டு தொடர்ந்து ஃப்ளாப்களாக கொடுத்து வரும் இசை வாரிசு ஹீரோ பண்ணும் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதாம்.

அண்மையில் ஒரு இயக்குநர் கதை சொல்லப் போயிருக்கிறார். கதை சொல்வதற்கு முன்பே 'இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு தான் கால்ஷீட் இருக்கு' என்று சொல்லிவிட்டு தான் கதையே கேட்டிருக்கிறார் ஹீரோ.

Music Hero's atrocity

கதை கேட்டு முடித்தவருக்கு கதையில் திருப்தியில் இல்லை. 'பிரதர் இது யாருக்காக பண்ணின கதை?' என்று கேட்டிருக்கிறார். 'உங்களுக்காகவே சார்' என்று பதிலளித்திருக்கிறார் இயக்குநர்.

'இல்லை நீங்க விஜய் ரேஞ்சுக்கு கதை ரெடி பண்ணுங்க... இன்னும் ரெண்டு வருஷத்துல அந்த ரேஞ்சுக்கு போயிடுவேன்' என்று கூலாக சொல்லியிருக்கிறார்.

விஜய்க்கு கதை ரெடி பண்ணினா விஜய்கிட்ட போயிருப்பேனே... நான் ஏன் இவர்கிட்ட போகணும்? இது இயக்குநரின் இப்போதைய புலம்பல்

Read more about: gossip, கிசுகிசு
English summary
Music hero is demanding new directors to make a script for him equal to Thalapathy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil