»   »  காசு இல்லை... கால்ஷீட் இருக்கு வேணுமா...?

காசு இல்லை... கால்ஷீட் இருக்கு வேணுமா...?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இரண்டு சுமார் ஹிட்கள் கொடுத்துவிட்டு மூன்று பெரிய ஃப்ளாப்களை கொடுத்து தவிக்கும் இசை வாரிசு ஹீரோ அவர். முதல் இரண்டு படங்கள் ஓரளவுக்கு ஓடியதால் தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்றார்கள். அதில்தான் இப்போது சிக்கல்.

வரிசைகட்டி நின்ற தயாரிப்பாளர்களையும் அட்வான்ஸையும் ஒன்றுகூட மிஸ் பண்ணாமல் வாங்கி சேர்த்துக்கொண்டார் ஹீரோ.

Music hero in trouble

இயக்குநர், கதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று ஃபைனான்ஸ் கம்பெனியில் பணம் போடுவது போல போட்டவர்கள் இப்போது தம்பியின் நடிப்புத் திறமையையும், வரிசையான ஃப்ளாப்களால் சரிந்துபோன தம்பியின் மார்க்கெட்டையும் பார்த்து அட்வான்ஸைத் திருப்பிக் கேட்கிறார்கள்.

திருப்பித் தருவது என்றால் என்னவென்றே தெரியாத மாதிரி அவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் டபாய்க்கிறாராம் தம்பி.

சமீபத்தில் தான் கொடுத்த 50 லட்சம் அட்வான்ஸை திருப்பி கேட்டவருக்கு தம்பி சொன்ன பதில் தான் 'காசு இல்லை... கால்ஷீட் இருக்கு... ஒரு 40 நாள் வேணுமா?'

நஷ்டம் 50 லட்சத்தோடு போய்த் தொலையட்டும் என்று தலையிலடித்தபடி திரும்பி விட்டாராம் தயாரிப்பாளர்.

Read more about: gossip, கிசுகிசு
English summary
After continuous flops, no producer is ready to taking risk with making movies with Music hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil