»   »  இயக்குநரை கழற்றி விட்ட இசை ஹீரோ

இயக்குநரை கழற்றி விட்ட இசை ஹீரோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேகமாக வளர்ந்து வரும் இசை ஹீரோ அவர். இந்த ஆண்டு அவரின் பெக்கர் படம் மெகா ஹிட் அடித்ததில் செம குஷியாக உள்ளார். அந்த பட்த்தின் இந்தி ரீமேக்கை அவரே இயக்க போகிறார்.

இந்த இசை ஹீரோ தன் படங்களில் அதிகமாக இயக்குநர்களின் வேலைகளில் தலையிடுவார் என்று சொல்வார்கள். இதுவரை இது பஞ்சாயத்தாக மாறியது இல்லை. ஆனால் முதன்முறையாக அப்படி ஒரு பஞ்சாயத்து வருவதுபோல தெரிகிறது.

Music hero turns director for ghost movie

ஹீரோ நடித்த பேய் படம் ஒன்றின் இறுதிகட்ட பணிகள் நடந்துவருகின்றன. இதில் ஹீரோ அதிகமாக தலையிட்டு கதையில் தனக்கு அதிக முக்கியத்துவம் வருவதுபோல் மாற்ற சொல்லியிருக்கிறார். இது பெரிய பிரச்னை ஆக, இயக்குநர் கடுப்பாகி உயர நாயகனின் வாரிசை இயக்கப் போய் விட்டாராம்.

இயக்குநர் சென்று விட்டதால் அப்பாடா... நிம்மதி என்றுதானே எடிட்டிங், டப்பிங்கை பார்த்து வருகிறாராம் ஹீரோ. இயக்குநர் ஆவதற்கு பயிற்சி எடுத்துக்கறது தப்பில்லை... அதுக்குன்னு இப்படியா?

English summary
Music Hero is finally took full control of his ghost movie without the knowledge of the director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil