»   »  "காதல்" இசையமைப்பாளர் காதலியுடன் ஓட்டம்?

"காதல்" இசையமைப்பாளர் காதலியுடன் ஓட்டம்?

Subscribe to Oneindia Tamil

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காதல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் தனது காதலியுடன் தலைமறைவாகி விட்டதாகபரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது.

ஜோஸ்வா ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் காதல். மிகவும் பரபரப்புடன் ஓடிக்கொண்டுள்ள இந்தப் படத்திற்கு ஜோஸ்வா ஸ்ரீதர் என்ற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் ஜோஸ்வாவின் இசை மிகவும் பேசப்பட்டு வருகிறது. ஜோஸ்வாவின் வீடு அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ளது.இவருக்கு உகாலி என்ற மனைவியும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி நாகாலாந்து மாநலத்தைச் சேர்ந்தவர், காதல் திருமணம் செய்தவர்ஜோஸ்வா.ஜோஸ்வாவுக்கும், இவரது இசைக் குழுவில் உள்ள லதா ஷா என்ற கீபோர்டு கலைஞருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாகத்தெரிகிறது. லதா ஷா பெங்களூரைச் சேர்ந்தவர்.

ஜோஸ்வா தனியாக ஒரு இசைக் குழுவையும் வைத்துள்ளார். அதிலும் லதா ஷாதான் கீபோர்டு வாசிப்பார்.

ஜோஸ்வாவுடன் காதல் வயப்பட்ட லதா ஷா அடிக்கடி பெங்களூரிலிருந்து சென்னை வந்து ஜோஸ்வாவுடன் தங்கியிருப்பார் என்றுகூறப்படுகிறது. இவர்களது காதலை லதா ஷாவின் குடும்பத்தினர் விரும்பவில்லை.

இந் நிலையில் ஜோஸ்வாவும், லதா ஷாவும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்துள்ளார்கள். அதற்குப் பிறகு இருவரையும் காணவில்லை.அவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூர் காவல் நிலையத்தில் லதா ஷாவின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக பெங்களூர் போலீஸார்சென்னை போலீஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மயிலாப்பூர் துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரின் தலைமையிலான போலீஸார் சாந்தி காலனியில் உள்ளஜோஸ்வாவின் வீட்டுக்குச் சென்று அவரது தாயார் மற்றும் மனைவியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஜோஸ்வா ஸ்ரீதர் குறித்து வெளியாகியுள்ள செய்தி திரையுலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

Read more about: actress, cinema, groom, kollywood, meena, ramya, sadha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil