எனக்கு மவுசு இன்னும் குறையலீங்கோ: பதறும் நடிகை
சென்னை: என் மார்க்கெட் அடியாகிவிட்டது என்று வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தளபதியின் லேட்டஸ்ட் நாயகி தெரிவித்துள்ளார்.
தளபதியின் மாவட்ட பட நாயகி கையில் புதிய படங்களே இல்லை. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான பியூட்டி கிங் படம் பப்படமாகிவிட்டது. படத்தில் வந்த ஹீரோவுக்கும், இவருக்கும் இடையே செம கெமிஸ்ட்ரி உண்டு. அது படத்தில் அருமையாக வேலை செய்யும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையே அளித்தது.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் அம்மணியின் மார்க்கெட் படுத்துவிட்டதால் அவர் இந்தி படங்களில் நடிக்க நடையாய் நடக்கிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து அறிந்த நடிகையோ என் கையில் 3 தெலுங்கு படங்கள் உள்ளன. அதனால் தான் தமிழில் புதிய படங்களை ஒப்புக்கொள்ள முடியவில்லை. என் மார்க்கெட் அடியாகிவிட்டது என்று சொல்வதெல்லாம் வெறும் வதந்தி. அதை யாரும் நம்பிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கையில் 3 தெலுங்கு படங்கள் உள்ளது என்று அவர் கூறுகிறார். ஆனால் டோலிவுட்டில் கேட்டால் 3 படங்கள் இருக்கிறது ஆனால் அவரை நடிக்க வைப்பது இன்னும் உறுதியாகவில்லை என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











