»   »  அப்படி நடித்தாரா நமீதா?

அப்படி நடித்தாரா நமீதா?

Subscribe to Oneindia Tamil

மாயா என்ற ஆங்கிலப் படத்தில் 90 சதவீத நிர்வாண கோலத்தில் நமீதா நடித்துள்ளதாக படு சூடான செய்தி கிளம்பியுள்ளது.

நச்சென நடிப்பவர் நமீதா என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. நமீதா என்றால் கிளாமர், கிளுகிளுப்பு என்பது எல்.கே.ஜி. குழந்தைகளுக்குக் கூட தெரிந்த ஒரு சமாச்சாரம்.

இந்த நிலையில், மாயா என்ற ஆங்கிலப் படத்தில் நிர்வாண கோலத்தில் நமீதா திறமை காட்டியுள்ளதாக ஒரு சூடான செய்தி சுவையாக பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளைக் கலக்கி வரும் நமீதா முதல் முறையாக நடித்துள்ள ஆங்கிலப் படம்தான் மாயா. இப்படத்தில் விபச்சாரப் பெண் கேரக்டரில் நடித்துள்ளாராம் நமீதா.

படத்தில் வரும் பல காட்சிகள் பலான காட்சிகளாம். அதாவது 90 சதவீதம் நிர்வாண காட்சிகளாம். இருந்தாலும் இந்தப் படத்தை ஒத்துக் கொண்டு நடித்து வந்தார் நமீதா. காரணம் அப்போது அவருக்கு கையில் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் இல்லாததே.

இதனால் விருப்பமே இல்லாமல் அந்தக் காட்சிகளில் நடித்துக் கொடுத்தாராம் நமீதா. ஆனால் பின்னர் பட வாய்ப்புகள் குவியவே மாயாவை கண்டுகொள்ளாமல் ஒதுங்க ஆரம்பித்தார் நமீதா.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாயா பட இயக்குனர் நமீதாவை அணுகி, மிச்சமுள்ள காட்சிகளை முடித்துத் தர வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் முடியவே முடியாது என்று மறுத்து விட்டாராம் நமீதா.

படத்தில் எனது கேரக்டரை ஷகீலாவை விட மோசமான ரேஞ்சுக்கு சித்தரித்துள்ளீர்ள். இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி விட்டாராம் நமீதா.

ஆனால் ஒத்துக் கொண்டபடி நடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார் இயக்குநர். மேலும், இதை விட இன்னும் பலான காட்சிகள் சிலவற்றிலும் நடித்த ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளாராம்.

ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்த நமீதா, முடியவே முடியாது என்று மறுத்து விட்டார். மேலும் நடிகர் சங்கத்திலும் இதுகுறித்து புகார் கூறியுள்ளார்.

நமீதா நடித்தவரை உள்ள காட்சிகளைக் கோர்த்து படத்தை எப்ப வெளியிடுவாங்க என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil