»   »  கரெக்ட் பண்ணும் நமீ!

கரெக்ட் பண்ணும் நமீ!

Subscribe to Oneindia Tamil

இந்தப் புத்தாண்டில் நமீதா சூப்பர் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளார். அதாவதுஊதாரித்தனமாக உடலில் பரவியிருக்கும் ஊளைச் சதையைக் குறைத்து, உடலை படுடிரிம்மாக ஆக்கப் போகிறாராம்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள். இது யாருக்கு பொருந்துகிறதோஇல்லையோ, நடிகர், நடிகைகளுக்கு கண்டிப்பாக பொருந்தும். சிக் கெனஇருந்தால்தான் ஜில்லுன்னு வாய்ப்புகள் வரும் என்பதால் நடிகைகள் தங்களது மேனிஅழகைப் பேணுவதற்கு பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உடலை கட்டு செட்டாக வைத்துக் கொள்ள டயட் கண்ட்ரோல், யோகா, உடற் பயிற்சிஎன ஏகப்பட்ட ஐட்டங்களைப் போட்டுத் தாக்குவது நடிகைகளின் வழக்கம். நடிகர்கள்என்றால் ஜிம்முக்குப் போய் கும்முன்னு எக்சர்ஸைஸ் செய்து மெருகேற்றிக்கொள்வார்கள்.

தமிழ் ஹீரோயின்களில் இடையழகி திரிஷா, ஆசின், ஷ்ரியா, நயனதாரா உள்ளிட்டமுன்னணி நாயகிகள் அனைவருமே உடலை சிறப்பாக வைத்துக் கொள்வதில் படுகவனமாக இருக்கிறார்கள். ஆனால் நமீதா மட்டும் இதில் விதி விலக்கு.

உடம்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அவர் மெனக்கெடுவதில்லை.நினைத்ததை சாப்பிடுவார், உடற்பயிற்சிக்காக பெரிய அளவில் நேரம்ஒதுக்குவதில்லை. மொத்தத்தில் உடலின் கண்ட்ரோல் பேனலை அவர் சரியாககவனிப்பதில்லை.

ஆனால் சமீப காலமாக நமீதாவின் உடல் வாகு அவரையும் அறியாமல் அதுஇஷ்டத்திற்கு போகத் தொடங்கி விட்டதாம். இதனால் அப்செட் ஆன நமீதா, உடல்எடையைக் குறைத்து சிக்கென ஆக முடிவு செய்துள்ளாராம். இந்த புத்தாண்டில் அவர்போட்டுள்ள முதல் சபதமே இதுதானாம்.

இதற்காக நமீதா முடிவு செய்துள்ள வழி யோகா. தினசரி தவறாமல் யோகா செய்துஉடலை ஸ்லிம் ஆக்கப் போகிறாராம். தியானம், மூச்சுப் பயிற்சி என விதம் விதமானயோகாசனங்களை நல்ல டீச்சர் வைத்து கற்றுக் கொள்ளப் போகிறாராம்.

உடலை மட்டுமல்லாமல் மனதையும் தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துநிலைப்படுத்த யோகா உதவும் என்பதால் அதை தேர்ந்தெடுத்துள்ளாராம். எப்படியும்இன்னும் 3 மாதங்களுக்குள் கணிசமான எடையைக் குறைத்து கலகக்கலாக மாறி விடவேண்டும் என்று வேகமாக உள்ளாராம் நமீதா.

நமீதாவைப் பார்த்து மனம் தடுமாறுவதைத் தவிர்க்க இளைஞர்களும் யோகாவைமுயற்சிக்கலாம்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil