»   »  நமீதாவின் அடியாள்!

நமீதாவின் அடியாள்!

Subscribe to Oneindia Tamil

செல்போன் வந்தாலும் வந்தது, எத்தனையோ விதமான வேலைகளை அதற்குக் கொடுத்து கலக்குகிறார்கள் நம்மவர்கள்.

நட்டு வச்ச தென்ன மரம் போல நெடிதுயர்ந்து வளர்ந்து நிற்கும் நமீதாவுக்கு உற்ற துணைவனே செல்போன் தான். பேசுவதற்குமட்டுமல்ல, தனக்குப் பிடிக்காதவர்களை தனது பாய் பிரண்டிடம் போட்டுக் கொடுக்கவும் செல்போனை சகட்டு மேனிக்குஉபயோகிக்கிறார் நமீதா.

நமீதாவின் ஸ்டைலே தனியாம். தனக்குப் பிடிக்காத வகையில் யாராவது தன்னிடம் பேசத் தொடங்கினால், உடனே ஆக்ஷனில்இறங்கி விடுகிறார் அம்மணி. எப்படி தெரியுமா? எதிரில் இருப்பவருடன் பேசிக் கொண்டே, தனது செல்போன் மூலமாக, தனதுபாய் பிரண்டுக்கு, எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்.

மெசேஜ் கிடைத்த உடன், பார்ட்டி சூடாகி படு வேகமாக ஸ்பாட்டுக்கு வந்து சேருகிறது. நமீதாவின் கண் ஜாடையைப் பார்த்தும்,சம்பந்தப்பட்ட பார்ட்டியின் ஸ்டேட்டஸைப் பார்த்தும், பல வகைகளில் டீல் செய்கிறாராம் காதலர்.

சிக்கியது முக்கியப் புள்ளி என்றால் தனியாகக் கூப்பிட்டு, இது என்னோட "ஓன் பிராபர்ட்டி..! இத்தோட விட்ருங்க என்று அன்பாககூறி அனுப்பி விடுகிறாராம். கொஞ்சம் ஏப்ப சாப்பையான ஆள் என்றால் எலும்பை எண்ணி விடுவேன் என்று அதிரடியாகமிரட்டுகிறாராம்.

படப்பிடிப்பின் போது நம்ம ஹீரோக்கள் யாராவது அளவுக்கு அதிகமாக நமீதாவிடம் நெருங்கி விட்டாலும் அவ்வளவு தான்.உடனடியாக "அடியாளுக்கு எஸ்.எம்.எஸ். பறந்து விடும்

நடிப்பது ஹீரோயினாக இருந்தாலும் வில்லத்தனத்திலும் நமீதா பெரிய ஆள்தான் போல.

இது மட்டுமா? படப்பிடிப்புகளுக்காக வெளியூர் செல்ல வேண்டும் என்றால் நமீதாவுக்கு விமானத்தில் டிக்கெட் புக் செய்வதற்குள்போதும் போதும் என்றாகி விடுகிறதாம்.

ஏனென்றால் எங்கு செல்வதென்றாலும் தனக்கு ஜெட் ஏர்வேஸில் தான் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று நச்சரிக்கிறாராம் நமீதா.வேறு விமானத்தில் டிக்கெட் இருக்கிறது என்றாலும் அதில் ஏற மறுத்து விடுகிறார்.

கோலிவுட்டில் ராசியான நடிகை என்ற பெயர் வேறு இப்போது இவருக்கு இருப்பதால் வேறு வழியில்லாமல் அடித்துப் பிடித்துஜெட் ஏர்வேஸிலேயே டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறார்களாம்.

ஜெட் ஏர் வேஸ் பயணத்தில் அப்படி என்ன தான் மர்மம் இருக்கிறது என்று தெரியாமல் விழிக்கிறார்கள் தயாரிப்பு நிர்வாகிகள்.என்றைக்காவது ஒரு நாள் இந்த மர்மம் விலகாமலா இருக்கப் போகிறது என்று இவர்கள் இப்போதைக்கு மனதை தேற்றிக்கொள்கிறார்கள்.

அப்படியே போகிற போக்கில் நமீதா, பத்ரி என்ற ஒரு புதுமுக இயக்குனர் "கம் நடிகரின் தலைப்புச் செய்தி படத்தில் நடித்துவருகிறார். இதில் நமீதாவுக்கு அய்யராத்துப் பொண்ணு வேடமாம். இதுவரை கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்தநமீதாவுக்கு நடிக்கவும் தெரியும் என்பதை இந்தப் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் இந்தப் படத்தின்கதாநாயகனும், இயக்குனருமான பத்ரி.

பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர், இப்போது அமெரிக்க வாசி. அங்கு லெதர் எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்து வந்தாலும் ரொம்பநாளாக தமிழ் படத்தை இயக்கி நடிக்க வேண்டும் என்ற கனவு இப்போது நனவாகியுள்ளதாம். முதல் படத்திலேயே டபுள் ரோலில்வேறு இவர் கலக்கப் போகிறாராம்.

கொசுறு: நமீதாவுக்கு எல்லா உடையும் பிடிக்குமாம். ஆனால் சேலை மட்டும் பிடிக்கவே பிடிக்காதாம். அதனால் அவரிடம் விதம்விதமான டிரஸ்கள் இருந்தாலும் ஒரு சேலை கூட கிடையாதாம்.

சேலையைப் பார்த்தாலே அப்படி வருமாம் அவருக்கு. அது சரி, சேலைக்கு மரியாதை கொடுக்கும் தமிழ் கூறும் நல்லுலகில்,சேலையே பிடிக்காத ஒரு அம்மணி ராசியான முன்னணி நடிகை!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil