மகன் விஷயத்தில் எடுத்த முடிவு.. தாய் போட்ட தடை.. உச்சக்கட்ட கடுப்பில் நடிகர்.. பிரச்னை தொடங்கிடுச்சாம்

By Staff

சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இவர். சில முறை தேசிய விருதுகளையும் வென்றிருக்கும் அவருக்கு சில வருடங்களுக்கு முன்புதான் மனைவியுடன் விவாகரத்து நடந்தது. சூழல் இப்படி இருக்க அவர் தனது மகன் விஷயத்தில் ஒரு முடிவு எடுத்ததாகவும்; அதற்கு நடிகரின் முன்னாள் மனைவி உடனடியாக முட்டுக்கட்டை போட்டிருப்பதாகவும் திரைத்துறையிலிருந்து கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

திரைத்துறையில் இந்த நடிகர் அறிமுகமானபோது பலரும் கடுமையாக கிண்டல்களை செய்தார்கள். இவர் அதையெல்லாம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விமர்சனம் செய்தவர்களுக்கு தன்னுடைய வெற்றியால் மட்டுமே பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்த அவர்; தனது திறமையை வளர்த்துக்கொண்டு படிப்படியாக வளர்ந்தார். ஒருகட்டத்தில் நடிகரின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்க அவரை விமர்சித்தவர்கள் எல்லாம் எதிர்பார்த்தபடியே வாயை மூடிக்கொண்டார்கள்.

இந்திய அளவில் பிரபலம்: நடிகரின் திறமையை பார்த்து பலரும் பிரமித்தார்கள். ஒரு லெஜண்ட்ரி இயக்குநர் கூட இந்த நடிகர் சர்வதேச அளவில் ஜொலிக்கக்கூடிய அத்தனை திறமைகளையும் கொண்டிருக்கிறார். அது ஒரு நாள் நடக்கும் என்று கூறும் அளவுக்கு நடிகர் தன்னை உருவாக்கினார். தமிழில் மட்டும் ஜொலித்துக்கொண்டிருந்த அவர் பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கினார். இதனால் இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

National Award-Winning Actor in Fresh Gossip as Ex-Wife Opposes Son s Film Debut

பெர்சனல் வாழ்க்கை: திரைத்துறை வாழ்க்கையில் இப்படி நல்ல பெயரை சம்பாதித்திருக்கும் அவர்; பெர்சனல் வாழ்க்கயில் சர்ச்சையை சந்தித்தவர். பெரிய வீட்டு மருமகனான அவர் தகப்பனாகவும் மாறினார். சுமூகமாக அவரது திருமண வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை சில வருடங்களுக்கு முன்பு நடிகருக்கும், அவரது மனைவிக்கும் தொடர்ந்து பிரச்னைகள் வந்துகொண்டே இருந்தன. இதற்கெல்லாம் காரணம் நடிகர்தான் என்றும் சொல்லப்பட்டது.

விவாகரத்து: அதாவது பெண்கள் விஷயத்தில் நடிகர் படு வீக் என்றும்; இதை தெரிந்தும் ஆரம்பத்தில் நடிகரின் மனைவி அனுசரித்துதான் போனார். ஆனால் நாளாக நாளாக நடிகரின் சேட்டை அதிகரிக்க இனியும் இவருடன் காலம் தள்ள முடியாது என முடிவெடுத்துதான் பெரிய வீட்டு மகள் நடிகரை விட்டு விலகிவிட்டதாகவும் பேசப்பட்டது. இப்போது இரண்டு பேருமே சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள்.

புதிய கிசுகிசு: இந்நிலையில் நடிகர் மற்றும் அவரது முன்னாள் மனைவி பற்றி புதிய கிசுகிசு எழுந்திருக்கிறது. அதாவது, தனது மகனை திரைத்துறையில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்க முடிவெடுத்தாராம் நடிகர். அதற்கு மகனும் முழு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். ஆனால் இதனை கேள்விப்பட்ட நடிகரின் முன்னாள் மனைவியோ,மகனிடம் அவர் மூலம் நீ ஒன்றும் திரைத்துறையில் அறிமுகம் ஆக வேண்டாம். கொஞ்ச நாட்கள் பொறுத்திரு நானே உன்னை பெரிய அளவில் அறிமுகம் செய்கிறேன் என்று கூறினாராம். ஆனால் மகனுக்கோ தனது தந்தை மூலம அறிமுகம் ஆக வேண்டும் என்றுதான் கொள்ளை ஆசையாம். இப்போது அம்மா வேறு இப்படி சொல்வதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாராம். தான் எடுத்திருக்கும் முடிவுக்கு முட்டுக்கட்டையாக் வந்திருக்கும் முன்னாள் மனைவியை நினைத்து நடிகர் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறாராம்.இரண்டு பேருக்கும் தொலைபேசியில்கூட வாக்குவாதம் முற்றி பிரச்னை வலுத்து இருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X