தேசிய விருது சர்ச்சை.. காரணம் அதுவா? இன்னும் தீவிரமா களமிறங்க முடிவு செய்த பிரபல நடிகை!

சென்னை: தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் அமைதியாக ஒரு பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறதாம். குறிப்பாக, விமர்சகர்கள் பாராட்டிய ஒரு படத்துக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காதது ஏன் என்ற கேள்விதான் பலரிடமும் எழுந்துள்ளதாம். அதைவிட, அந்தப் படத்தின் தயாரிப்புத் தரப்பில் இருக்கும் முக்கிய பிரபலங்களின் அரசியல் நிலைப்பாடும் இதற்கு காரணமாக இருந்திருக்குமோ என்ற சந்தேகமும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

சினிமாவில் மட்டுமல்லாமல், சமூக மற்றும் அரசியல் விவகாரங்களிலும் தொடர்ந்து தங்களது கருத்தை வெளிப்படையாக பதிவு செய்து வரும் அந்த நட்சத்திரக் குடும்பம், கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவிலான பல விவகாரங்களில் வெளிப்படையாக குரல் கொடுத்து வருகிறது. அதனால், சில வட்டாரங்களில் இருந்து எதிர்ப்புகளையும் அவர்கள் தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், தேசிய விருது அறிவிப்புக்குப் பிறகு அந்தக் குடும்பத்தினர் மத்தியில் முக்கிய ஆலோசனை நடந்ததாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. "ஒரு விருது கிடைக்கவில்லை என்பதற்காக நாம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாது. இதுவரை பேசியதை விட இன்னும் உறுதியாக மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்" என்பதே அந்த ஆலோசனையின் மையக் கருத்தாக இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.

National Awards Buzz Actress Reportedly Plans Stronger Stand on Social Issues Amid Fresh Speculation

இனி அமைதியா இருக்கக் கூடாது: குறிப்பாக, அந்த நடிகை மிகவும் உறுதியான குரலில் தனது கருத்தை வெளிப்படுத்தியதாகவும், எந்த அழுத்தம் வந்தாலும் சமூக விவகாரங்களில் இனியும் அமைதியாக இருக்கக் கூடாது என்று குடும்பத்தினரிடமே வலியுறுத்தியதாகவும் சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

அரசியல் காரணங்களா?: அதே நேரத்தில், தேசிய விருது தேர்வில் அரசியல் காரணங்கள் இருந்ததாக புகைச்சல்கள் இன்னும் ஓடிக் கொண்டுதான் உள்ளது. இருப்பினும், சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அதையே அடிப்படையாகக் கொண்டு கோலிவுட்டிலும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், விருதை விட தங்களது நிலைப்பாடே முக்கியம் என்ற மனநிலையில்தான் அந்த நட்சத்திரக் குடும்பம் இருப்பதாகவும், இனி சமூக விவகாரங்களில் இன்னும் தீவிரமாக களமிறங்க முடிவு செய்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X