கொஞ்ச நாளைக்கு சினிமா பக்கம் போக வேண்டாம்... தமிழக தலைவர்களுக்கு மேலிடம் கட்டளை!
மெர்சலான படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த படத்துக்கு பாசிட்டிவ் பப்ளிசிட்டி ஆக்கி கட்சிக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டியை தேடித் தந்ததால் தமிழக தலைவர்கள் மீது கடுப்பில் இருக்கிறதாம் காவிக்கட்சி.
பொதுவாக சினிமா தொடர்பான பிரச்னைகள் என்றால் மீடியாக்களில் அதிக கவனம் பெறும். சினிமாக்காரர்கள் அதையே ஒரு ப்ரொமோஷனாக எடுத்துக்கொள்வார்கள். இந்த உண்மை இப்போதுதான் கட்சிக்காரர்களுக்குப் புரிந்திருக்கும் போல...
சமீபத்தில் ரிலீஸான டீசர் ஒன்றில் இந்து கடவுள் பற்றிய டயலாக் இருந்தது. அதை ஊதி பெரிசாக்கலாம் என்று திட்டமிட்டார்களாம். அதற்கு டெல்லி மேலிடம் தடை போட்டு விட்டதாம். கொஞ்ச நாளைக்கு சினிமாக்காரர்களை சீண்ட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறது.
பேசவே வேண்டாம் என்று சொல்லி வையுங்கள். கட்சி கொஞ்சமாவது டெவலப் ஆகும்!


Click it and Unblock the Notifications











