»   »  நவ்யாவின் லிப் ரிப்பேர்!

நவ்யாவின் லிப் ரிப்பேர்!

Subscribe to Oneindia Tamil

மலையாள மந்தாகினி நவ்யா நாயர் தனது உதட்டை சீரமைப்பதற்காக சென்னையின் பிரபலமான முகச்சீரமைப்பு மருத்துவரை அணுகியுள்ளாராம்.

மலையாளத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் அப்படியே தமிழுக்குத் தாவியவர் நவ்யா நாயர். முதலில் நடித்த அழகிய தீயே படம் நன்றாக இருந்தும் கமர்ஷியலாக ஹிட் ஆகவில்லை. இதனால் நவ்யாவுக்கு ஹிட் நாயகி வரிசையில் ஆரம்பத்தில் இடம் கிடைக்கவில்லை.

ஆனால் தங்கர் பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, நவ்யாவுக்கு பெரும் பிரேக் கொடுத்துத் தூக்கி விட்டது. இதைத் தொடர்ந்து மளமளவென்று தமிழில் சில படங்களில் நடித்தார் நவ்யா.

அதில் ஒரு படம்தான் அமிர்தம். அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது உதடுகளின் எழுச்சியைக் கூட்ட பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாராம் நவ்யா. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உதடுகள் துடிப்பாக மாறின. ஆனாலும் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட இடத்தில் வடு ஏற்பட்டு விட்டது.

அந்த வடுவை மறைக்க பலவிதமாக மேக்கப் போட்டும் கூட சரிப்பட்டு வரவில்லை. இதனால் அந்த வடுவை சரிப்படுத்தி உதட்டுக்குப் பொலிவு சேர்க்க தீர்மானித்த நவ்யா, இதற்காக மீண்டும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்ய தீர்மானித்தார்.

ஆனால் தொடர்ந்து படங்களில் பிசியாக இருந்ததால் உதட்டைக் கவனிக்க நேரம் கிடைக்கவில்லையாம். தமிழ் தவிர தற்போது கன்னடத்திலும் கலகலப்பாக நடித்து வருகிறார் நவ்யா. மலையாளத்திலும் பிசியாக உள்ளார்.

தொடர்ந்து பிசியாக இருந்தபோதிலும், இனியும் தாமதித்தால் வடு பெரிதாகி பிரச்சினையைக் கொடுத்து விடுமோ என்ற அச்சம் நவ்யாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிளாஸ்டிக் சர்ஜரியை வேகமாக முடித்து விட தீர்மானித்துள்ளார்.

இதற்காக சென்னையைச் சேர்ந்த பிரபலமான முகச்சீரமைப்பு நிபுணர் ஒருவரை அணுகியுள்ளார். அவர் கொடுக்கும் அட்வைஸ்படி விரைவில் நவ்யாவின் உதட்டு வடு சரி செய்யப்படவுள்ளதாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil