»   »  நவ்யா, ரேணுகா அடிதடி !?

நவ்யா, ரேணுகா அடிதடி !?

Subscribe to Oneindia Tamil

நவ்யா நாயரும், ரேணுகா மேனனும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு சண்டைபோட்டதாக நியூஸ் வெளியாகி மலையாள திரையுலகில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகைகளிடையே கடும் போட்டி நிலவுவது போல இப்போதுமலையாளத்திலும் ஹீரோயின்களிடையே செம போட்டி.

காரணம், அங்குள்ள அத்தனை நடிகைகளும் தமிழுக்கும், தெலுங்குக்குமாக திசைமாறிப் போய் விட்டதால் இருக்கிற ஒரு சில நடிகைகள் மத்தியில் பட வாய்ப்புகளைப்பிடிப்பதில் போட்டா போட்டியே நிலவுகிறது.


இதனால் ஹீரோக்களுக்குத்தான் செம கொண்டாட்டம். அவர்கள் மனது வைக்கும்ஹீரோயின்தான் உடன் நடிக்க முடிகிறதாம். இதனால் ஹீரோக்களை சோப்புப்போடுவதில் நடிகைகள் இடையே கடுமையாக போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனால் லேசு பாசாக நடிகைகள் மத்தியில் மோதலும் ஏற்படுகிறது. ஆனால்வாயளவில் இருந்து வந்த மோதல் இப்போது உடல் அளவுக்கு மாறி ரசாபாசமாகிஇருக்கிறதாம்.

சுரேஷ்கோபி டிக்கும் பத்கா என்ற மலையாளப் படத்தின் ஷூட்டிங்கின் போதுதான்இந்த நிஜ சண்டைக் காட்சி அரங்கேறியதாக கூறுகிறார்கள்.


இப்படத்தில் கோபிக்கு ஜோடியாக நவ்யா நாயரும், ரேணுகா மேனனும்நடிக்கிறார்கள்.

இருவரும் சம்பந்தப்பட்ட காட்சியைப் படமாக்க வேண்டி வந்ததால் நவ்யாவும்,ரேணுகாவும் செட்டுக்கு வந்துள்ளார்கள். ஏற்கனவே இரண்டு பேருக்கும் இடையேயார் பெரியவர் என்ற பிரச்சினை.

அதாவது தமிழில் நவ்யா நாயர் ஏறுகத்தில் இருப்பதால் தனக்கு வர வேண்டியவாய்ப்புகளை நவ்யாதான் தட்டிப் பறிப்பதாக குமுறலில் இருந்து வருகிறார் ரேணுகா.

இந்தக் குமுறல் பத்கா படப்பிடிப்பின்போது வாய் வார்த்தையாக வெடித்து விட்டது.இருவரும் ஏதோ ஒரு விஷயத்துக்காக வாயச் சண்டையில் இறங்கினர்.


இதுஅப்படியே கைகலப்பாக மாறி இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டார்களாம்.இருவரையும் சுரேஷ்கோபி உள்ளிட்டவர்கள் கஷ்டப்பட்டு பிரித்து விலக்கி விட்டுஆசுவாசப்படுத்தினார்களாம்.

இந்தப் பிரச்சினையால் ஷூட்டிங் சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாம். நவ்யா நாயர்,நான் கிளம்புகிறேன் என்று சொல்ல அவரை பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்திநடிக்க வைத்தார்களாம்.

ஆனால் எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை, நாங்க நல்ல ஃபிரண்ட்ஸ் என்றுரேணுகா மேனன் கூறுகிறார். ஆனால் சண்டை நடந்தது உண்மை, பெரிய அளவில்பிரச்சினை ஆகாமல் பேசித் தீர்த்துக் கொண்டார்கள் என்கிறது மலையாள திரையுலகவட்டாரம்.

உடம்புப் பிடி கேரியருக்கு நல்லதில்லையே அம்மணிகளா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil