»   »  நெட்டை கலக்கும் நயன்-சிம்பு லிப் லாக்!

நெட்டை கலக்கும் நயன்-சிம்பு லிப் லாக்!

Subscribe to Oneindia Tamil

சிம்பு, நயனதாராவின் நிஜ லிப் லாக் காட்சிகள் இணைய தளத்தில் வலம் வந்து கலக்கி வருகின்றன.

வல்லவன் படத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட நயன், சிம்பு காதல் படம் முடிந்ததும், முறிந்து மடிந்து விட்டது.சிம்புவை காரசாராமாக விமர்சித்து பேட்டி கொடுத்தார் நயன். ஆனால் சிம்புவோ இனிமேல் நயனைதொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பிரச்சினை ஓய்ந்து விட்டாலும், சிம்பு, நயனதாராவின் முறிந்து போன காதலின் சில முத்தாய்ப்பு காட்சிகள்இணையதளத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளன.

காதல் கொண்டிருந்தபோது சிம்புவும், நயனதாராவும் கொடுத்துக் கொண்ட நிஜ முத்தக் காட்சிகளை சிலஇணையதளங்கள் வெளியிட்டுள்ளன. வல்லவன் படத்தில் கொடுத்துக் கொண்ட லிப் லாக்கை விட இது படுதிரில்லாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கிறதாம்.

இந்தப் படங்கள், படத்துக்காக எடுக்கப்பட்டவை அல்ல, தனிப்பட்ட முறையில் அவர்கள் கொடுத்துக் கொண்டமுத்தக் காட்சிகள் இவை. எங்கு, எப்படி, யாரால் எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இதற்கிடையே, சிம்பு தரப்பிலிருந்து நயனதாராவுக்கு புதிதாக ஒரு தூது போயுள்ளதாம். அவர்களை நயனதாராசிறப்பாக வரவேற்றுப் பேசினாராம். ஆனாலும் சிம்புவின் பெயரைக் கேட்டதும் நயனதாராவின் முகம் சிவந்துபோய் விட்டதாம்.

சென்னைக்கு நயனதாரா வரும்போது அவரை சந்திக்க சிம்பு விருப்பம் தெரிவித்துள்ளாராம். இதற்குநயனதாராவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லையாம். பிரச்சினையைத் தீர்க்க பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டு சிம்புவின் தூதர்கள் திரும்பி விட்டனர். காயா , பழமா என்பது நயன் சென்னைக்கு வரும்போதுதெரியும்.

இந் நிலையில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நயனதாரா நடிக்கவுள்ளார். ஹரி இயக்கத்தில் உருவாகும் வேல்படத்தில் சூர்யாவுக்கு சரியான ஜோடி கிடைக்காமல் அவதிப்பட்டார் ஹரி. பின்னர் நயனதாராவை அவர்தொடர்பு கொண்டு உடனே சரி என்று சொல்லி விட்டாராம்.

குரு கேட்கும் போது மறுக்க முடியுமா?

Read more about: nayanatarasimbu hot kiss

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil