»   »  சிம்பு வருகை; நயன் ஓட்டம்!

சிம்பு வருகை; நயன் ஓட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயனதாராவை சந்தித்து சமரசம் செய்து கொள்ள, ஹைதராபாத்துக்கு சிம்பு வந்ததால், தெலுங்குப் படப்பிடிப்பை கேன்சல் செய்து விட்டு நயனதாராகேரளாவுக்கு போய் விட்டார். இதனால் சிம்பு பெரும் ஏமாற்றமடைந்தார்.

வல்லன் படத்தோடு சிம்பு, நயனதாரா காதல் முறிந்து விட்டது. சிம்புவுக்கும் எனக்கும் இனி எந்த தொடர்பும் இல்லை என்று நயனதாராதிட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

இந் நிலையில் சமீபத்தில், சிம்புவும், நயனதாராவும் தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக கொடுத்துக் கொண்ட முத்தக் காட்சிகள் அடங்கியபுகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தப் படங்களில் இருப்பது நானும், சிம்புவும்தான் என்பதை ஒத்துக் கொண்ட நயனதாரா, இவற்றை வெளியிட்டது சிம்புதான் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், நயனதாரா தற்கொலைக்கு முயன்றதாக திடீரென வதந்தி கிளம்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படிப்பட்ட பரபரப்பான பின்னணயில் நயனதாராவிடம் சமரசம் பேச சிலரை சிம்பு ஹைதராபாத்துக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களைசந்திக்கவே மறுத்து விட்டார் நயனதாரா. இதைத் தொடர்ந்து சிம்புவே நேரடியாக களத்தில் இறங்கினார்.

சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்குப் பறந்த சிம்பு, அங்கு நயனதாராவை சந்திக்கத் திட்டமிட்டார். சிம்பு வந்துள்ளது துளசி தெலுங்குப்படப்பிடிப்பில் இருந்த நயனதாராவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து நான் உடனே போக வேண்டும் என்று கூறி விட்டு ஹோட்டலுக்குப் போய்விட்டார்.

செட்டுக்கு வந்த சிம்பு, நயனதாரா அங்கு இல்லை என்பதை அறிந்து அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போனார். ஆனால் சிம்புவை சந்திக்கமுடியாது என்று நயனதாரா திட்டவட்டமாக கூறி விட்டார். ஆனாலும் சந்திக்காமல் நான் ஹைதராபாத்தை விட்டுப் போக மாட்டேன் என்று கூறிவிட்டுத் திரும்பியுள்ளார்.

அவரது பேச்சால் பயந்து போன நயனதாரா கேரளாவுக்குப் போய் விட தீர்மானித்து விமான நிலையம் சென்று அங்கிருந்து கேரளாவுக்குப் பறந்துவிட்டாராம்.

சிம்புவின் வருகையும், அவரைப் பார்த்து பயந்து நயனதாரா கேரளாவுக்கு ஓடியதும் தெலுங்குப் படவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை வதந்தியே: நயனதாரா

இதற்கிடையே தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி குறித்து நயனதாரா காட்டமாக பதிலளித்துள்ளார்.

எனது பெயரைக் கெடுக்கவும், எனது நடிப்புத் தொழிலை கெடுக்கவும் திட்டமிட்டு சிலர் வதந்தி பரப்புகிறார்கள். இதற்கெல்லாம் நான் கவலைப்படமாட்டேன், பயப்பட மாட்டேன்.

இப்போது நான் கேரளாவில் எனது வீட்டில்தான் இருக்கிறேன். எனது இமேஜை கெடுப்பதற்காகவே சிலர் இப்படி செய்தி பரப்புகிறார்கள். எனக்குநடிப்புதான் முக்கியம். இதுபோன்ற வதந்திக்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க விரும்பவில்லை.

துளசி படத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப் படம் சிறப்பாக வர பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளா நயனதாரா.

துளசி படப்பிடிப்பிலிருந்து பாதியில் விலகி கேரளாவுக்குப் போனது குறித்து நயனதாராவிடம் கேட்டபோது, படத்தின் ஹீரோ வெங்கடேஷுக்குபடப்பிடிப்பின்போது லேசான காயம் ஏற்பட்டது. இதனால் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டது. இதனால்தான் நானும் ஊருக்குத் திரும்பினேன்.இதற்கு வேறு காரணம் இல்லை என்றார்.

நயனதாராவை சந்திக்க துபாயில் உள்ள அவரது அண்ணனும் அவசரமாக கேரளாவுக்கு வந்துள்ளாராம்.

இந்த சோகத்திலும், தனது பெற்றோருக்காக அழகான புதிய கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்து அசத்தினாராம் நயனதாரா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil