எக்கச்சக்க செலவு... பிஎம்டபிள்யூ காரை விற்கும் நயன்!

நயன்தாராவும் பிரபு தேவாவும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். தற்போது இருவரும் பிரான்சில் தங்கியுள்ளனர்.
தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. காரணம், பத்திரிகையாளர்கள் சூழந்து கொள்வது மற்றும் பிரபு தேவாவின் முதல் மனைவி ரம்லத்தின் மிரட்டல்.
சென்னையிலும் ஒன்றாக வசிக்க முடியவில்லை. இருவரும் தனிகுடித்தனம் நடத்த பிரபுதேவா வீடுபார்த்தார். அதுவும், நடக்க வில்லை.
இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் இண்டர் நெட்டில் வெளியாயின. அவற்றை அவர்கள் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தன்னிடமிருந்த ரொக்கத்தில் பெரும் தொகையை பிரபுதேவாவுக்கே செலவழித்து வருகிறாராம் நயன்தாரா. ஆனால் படங்களில் நடிக்காமல் பிரபுதேவாவுடன் சுற்றிக் கொண்டிருப்பதால் வருமானம் குறைந்து கையில் பணமும் இல்லாத நிலை.
நிதி நெருக்கடியைச் சமாளிக்க இப்போது தனது ஆடம்பர பி.எம்.டபுள்யூ வெளிநாட்டு காரை விற்பதற்காக விலை பேசி வருகிறாராம். கிட்டத்தட்ட 1 கோடி மதிப்புள்ள அதிநவீன சொகுசு கார் இது. சில மாதங்களுக்கு முன்புதான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தார் நயன்தாரா.


Click it and Unblock the Notifications











