»   »  சிம்பு-நயன் மோதல்?

சிம்பு-நயன் மோதல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயனதாராவுக்கும், சிம்புவுக்கும் இடையிலான ரொமான்ஸ் குறித்துத்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கிடையே பெரிய பஞ்சாயத்து நடந்து வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

வல்லவனில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தபோது சிம்புவுடன் நயனதாராவுக்கு காதல் பிறந்தது. சிம்புவை விட்டுஎன்னால் வாழ முடியுமா என்பதை யோசிக்கவே முடியவில்லை என்று நயனதாரா கூறும் அளவுக்கு காதல்கனமாக இருந்தது.

ஆனால் இப்போது அதில் லேசாக விரிசல் விட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவின் லீலா வினோதங்களைகோலிவுட் நன்கறியும். இப்போது நயனதாராவுக்கும் அது தெளிவாகப் புரிந்து விட்டதால் கடுப்பாகியுள்ளாராம்.

ராத்திரியில் மட்டும் கவிதை பாடுவது, அழகைப் புகழ்வது என சிம்பு பிலிம் காட்டுவதும், பகலில் திரும்பிக் கூடபார்க்காமல் வேறு ஜோலிகளைப் பார்க்கப் போய் விடுவதுமாக இருப்பதால் நயனதாரா அப்செட்ஆகியுள்ளாராம்.

உனக்காக எல்லவாற்றையும் நிறுத்தி விட்டேன் என்று நயனதாராவிடம் முன்பு கூறிய பல விஷயங்களைமீண்டும் ஓபன் செய்துள்ளாராம் சிம்பு. இதுதான் நயனதாராவை அப்செட் செய்து விட்டதாம். இதனால் அவரைஅவாய்ட் செய்யும் வகையில் நடந்து கொள்கிறாராம் நயனதாரா.

சமீபத்தில் நயனதாரா தங்கியுள்ள ஹோட்டலுக்கு நள்ளிரவில் வந்துள்ளார் சிம்பு. கதவைத் தட்டியுள்ளார். திறந்துபார்த்த நயனதாரா, சிம்பு நிற்பதைப் பார்த்ததும் கோபத்துடன் கதவை பட்டென்று மூடி விட்டாராம். சிம்புவும்விடாமல் கதவைத் தட்டிக் கொண்டு நின்றுள்ளார்.

நீண்ட நேரம் கழித்து கதவத்ை திறந்துள்ளார் நயனதாரா. ஆனால் உள்ளே விடாமல் போய் விடுங்கள் என்றுகோபமாக கூறியுள்ளார். ஆனால் அலேக்காக உள்ளே புகுந்த சிம்பு, நீயில்லாமல் நானில்லை, நானில்லாமல்நீயில்லை, நாம் இல்லாமல் நாமே இல்லை என்று டயலாக்கை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

இதைக் கேட்டதும் இன்னும் டென்ஷன் ஆன நயனதாரா, என் பக்கத்தில் நெருங்காதீர்கள். மீறி வந்தால்தற்கொலை செய்து கொள்வேன் என்று உக்கிரமாக கத்தியுள்ளார். நயனதாராவின் இந்தக் கூச்சல் ஹோட்டலின்பல அறைகளுக்கும் பரவி அங்கே சலசலப்பு ஏற்பட்டதாம்.

இனியும் நயனதாராவிடம் பேசிப் பயனில்லை, நல்ல மூடில் இல்லை, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றுஎண்ணிய சிம்பு, சமாதான முயற்சிகளை அப்படியே அபார்ட் செய்து விட்டு கிளம்பிப் போய் விட்டாராம்.

சிம்புவுக்கும், நயனதாராவுக்கும் அப்படி என்னதான் பெரிய பிரச்சினையோ?

Read more about: nayanathara avoids simbu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil