»   »  நயனதாரா-சிம்பு மோதலில் அரசியல்

நயனதாரா-சிம்பு மோதலில் அரசியல்

Subscribe to Oneindia Tamil

சிம்புவுக்கும், நயனதாராவுக்கும் இடையே இருந்த பெவிக்கால் காதல் படாலெனமுறிந்து போனதன் பின்னணியில் ஏகப்பட்ட கோக்கு மாக்கு மேட்டர்கள்புதைந்திருக்கிறதாம்.

ஐயா படத்தில் அறிமுகமாகி சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ஓவர்நைட்டில் உச்சிக்குச் சென்றவர் நயனதாரா. தமிழ் சினிமாவை பெரும் கலக்குகலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வல்லவனிடம் சரண்டர் ஆகிமுடங்கிப் போனார் நயனதாரா.

சிம்புவுடன் ஏற்பட்ட நட்பு, அப்படியே பிக்கப் ஆகி காதலாக மாறிப் போனது.நயனதாரா மீது சிம்புவுக்கும் அம்புட்டு பாசம், நெருக்கம், நயனதாராவும் அப்படியே.

வல்லவன் படம் முடியும் தருவாயில் இருவருக்கும் இடையே லேசுபாசாக சிலமுரண்பாடுகள் தோன்றியுள்ளது. அவருடன் நடிக்க்க கூடாது, இந்த ஹீரோவுடன்நடிக்கக் கூடாது என சிம்பு சில சில கட்டளைகளைப் போட அவற்றை கேட்டுஅதிருப்தியாகியுள்ளார் நயனதாரா.

இருப்பினும் சிம்பு மீது கொண்ட பாசத்தால் சில வாய்ப்புகளை மறுத்தாராம். அதில் ஒன்றுதெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பட வாய்ப்பு. அதில் நடிக்க நயன்ஸை கேட்டுள்ளார்கள். வேண்டாம் என்றுசொல் என சிம்பு சொல்லவே அப்படியே செய்திருக்கிறார் நயனா.

பாலகிருஷ்ணா தரப்பு ரொம்பவே நெருக்க ரூ. 75 லட்சம் கேள் என்று சொல்லியிருக்கிறார் சிம்பு. முதலில்திகைத்த பாலகிருஷ்ணா தரப்பு 75க்கு ஓகே என்று சொல்லிவிட, கால்ஷீட் இல்லை என்று சொல்லி ஒதுங்கு எனசிம்பு கூற அப்படியே அந்தப் பட வாய்ப்புக்கு நோ சொல்லியிருக்கிறார்.

இதுபோலசில நல்ல பட வாய்ப்புகளை நயனதாரவை விட்டு விலகிப் போயின.ஆனாலும் சிம்புவுக்காக அதை பொறுத்துக் கொண்டார் நயனதாரா.

இந்த நிலையில்தான் நயனதாராவுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு சமாச்சாரம் நடந்தது.கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு டின்னருக்கு போகலாம் எனசிம்புவும், நயனாவும் முடிவு செய்தனர்.

சொன்ன நேரத்துக்கு முன்பாகவே சிம்பு ஹோட்டலுக்கு வந்து விட்டாராம். நயனா வரகொஞ்சம் தாமதமாகியுள்ளது. ஹோட்டலில் காத்திருந்த சிம்புவைப் பார்த்த ஒருவடக்கத்தி மார்வாடிப் பெண், அவரிடம் சென்று பேசியுள்ளார். நான் உங்கள் ரசிகைஎன்று ஆரம்பித்து சிம்புவிடம் படு பாசமாக பேசியுள்ளார்.

அவர் மீது சிம்புவுக்கும் திடீர் பற்று ஏற்பட்டு விட்டது. ரொம்ப நேரமாக கடலைபோட்டுக் கொண்டிருந்த இருவரும் சட்டென்று முடிவெடுத்து ரூமுக்குப் போய்விட்டனராம்.

அப்போது பார்த்து அங்கு வந்துள்ளார் நயனதாரா. சிம்புவைத் தேடிக் கொண்டிருந்தஅவரிடம், ஹோட்டல்காரர்கள் இப்பத்தான் சிம்புவும், ஒரு ரசிகையும் உள்ளேபோனார்கள் என்று போட்டுடைக்க டென்ஷன் ஆகி விட்டார் நயனதாரா. நேராகஹோட்டல் ரூக்கே போய் இருவரையும் கையும் களவுமாக பிடித்து தாளித்து எடுத்துவிட்டாராம்.

சிம்புவுக்கும், நயனதாராவுக்கும் இடையே பெரிய சண்டையே நடந்து முடிந்ததாம்.அதற்கு மேல் அங்கு இருக்க விரும்பாத நயனதாரா அங்கிருந்து கிளம்பி நேராகஹைதராபாத் போய் விட்டார்.

பிரபாஸுடன் நடிக்கும் தெலுங்குப் பட ஷூட்டிங்குக்குப் போனவர், கிண்டி மேட்டர்மனதில் வந்து அலைபாய டென்ஷனில் நடிக்கவே பிடிக்காமல் ரூமுக்குள்ளேயேஅடைந்து கிடந்துள்ளார்.

ஷூட்டிங்குக்கு வந்த நயனதாரா ஹோட்டலிலேயே இருப்பதை அறிந்த தயாரிப்பாளர்ரவீந்திர ரெட்டி, தனது மனைவியுடன் என்னவென்று விசாரிக்க ஹோட்டலுக்குப்போனார். அவரைப் பார்த்ததும் நயனதாரா அழுத கண்களும், மிரண்ட விழிகளுமாகநான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை, அட்வான்ஸை திரும்பி வாங்கிக்கொள்ளுங்கள். சிம்பு எனக்கு துரோகம் செய்ததை என்னால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. வாழவே பிடிக்கவில்லை என்று கூறி அழுதுள்ளார்.

அவரை சமாதானப்படுத்திய ரெட்டியும், அவரது மனைவியும் ஒரு வழியாகஷூட்டிங்க்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் நயனதாராவை நேரில்பார்த்துப் பேசியுள்ளார் சிம்பு. மன்னிச்சுக்கோ, மன்னிச்சுக்கோ என்று கூறிசமாதானப்படுத்தியுள்ளார். சிம்புவின் உருகலால், இறங்கி வந்த நயனதாராசமாதானமாகியுள்ளார்.

இந்த நிலையில்தான் அவரைத் தேடி சிவாஜி பட டான்ஸ் வாய்ப்பு வந்தது.ரஜினியுடன் சேர்ந்து ஆடும் அந்தப் பாட்டைத்தான் ஓபனிங் சாங் ஆக வைத்துள்ளார்இயக்குநர் ஷங்கர்.

இந்த வாய்ப்பை பெரிதாக நினைத்த நயனதாரா, ரஜினியுடன் ஆடப் போவதாகதெரிவித்துள்ளார். இதை சிம்பு விரும்பவில்லையாம் (தனுஷின் மாமனார் என்றுரஜினியை நினைத்தாரோ, என்னவோ!). முன்னணி ஹீரோயினாக மாறி விட்டாய்.இப்போது போய் இப்படி ஒரு பாட்டுக்கெல்லாம் ஆடுவது சரியாக இருக்காது என்றுநயனதாராவை திருப்பப் பார்த்துள்ளார்.

ஆனால் அதை ஏற்காத நயனதாரா, கண்டிப்பாக ஆடத்தான் போகிறேன் என்று கூறிவிட்டு புனேவுக்குப் புறப்பட்டு விட்டார்.

போன இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, நயனதாராவை தனியாக உட்கார வைத்துஏகப்பட்ட அட்வைஸ்களை பண்ணியுள்ளார். வளரும் நடிகை, நல்ல வாய்ப்புகள்உள்ளது. உன்னைப் பற்றி நிறைய தப்பான செய்திகள் வருகிறதே என்றுவருத்தப்பட்டுள்ளார் ரஜினி.

அவர் சொல்லச் சொல்ல கொஞ்சம் கொஞ்மாக நயனதாராவுக்கு ஞானோதயம்வந்துள்ளது. கண்கள் கலங்கிக் காணப்பட்ட நயனதாரா, இப்போது நான் தெளிவாகிவிட்டேன் சார் என்று அவரிடம் கூறியுள்ளார். அதற்குப் பிறகுதான் சிம்புவுக்கு சாரிசொல்லி அவர் கொடுத்த பேட்டி வெளியானது.

நயனதாராவின் இந்த அதிரடி முடிவு வந்தபோது அமெரிக்காவில் இருந்தார் சிம்பு.நயனதாராவின் அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்தார், கலங்கிப் போனார், உடைந்தும்போனார். நயனதாரவை செல்லில் பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து அப்பா ராஜேந்தருக்கும், அம்மா உஷாவுக்கும் போன் போட்டு கேவிக்கேவி அழுது புலம்பியுள்ளார். நீங்கள்தான் எங்களை மீண்டும் சேர்த்து வைக்கவேண்டும் என்று குமுறியுள்ளார்.

பிள்ளையின் அழுகையால் உடம்பெல்லாம் பதறிப் போன ராஜேந்தரும், உஷாவும்,நயனதாராவிடம் போனில் பேசியுள்ளனர். ஆனால் அவர் எடுத்த முடிவு எடுத்ததுதான்என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.

ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன ராஜேந்தர், நான் யார் தெரியுமா? தமிழ்நாட்டில்கலைஞர் ஆட்சிதான் நடக்கிறது. கலைஞருக்கு சிம்பு பேரன் மாதிரி. நான் நினைத்தால்உன்னை இங்கே வரவே விடாமல் தடுக்க முடியும் என்று வளைத்து வளைத்துநயனதாராவை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன நயனதாரா மேட்டரை தயாரிப்பாளர் ரெட்டியிடம்போட்டுள்ளார். விஷயம் பெரிதாவதை உணர்ந்த ரெட்டி, தனது உறவினரான ஆந்திரமுதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் கொண்டு போயுள்ளார். (முதல்வரின் சகோதரிதான்தயாரிப்பாளர் ரெட்டியியின் மனைவி)

உடனடியாக ஆந்திர முதல்வர் அலுவலகத்திலிருந்து தமிழக அமைச்சர் ஆற்காடுவீராசாமியிடம் பேசி முதல்வரிடம் பேச வேண்டுமே என்று கேட்டுள்ளனர். மேட்டரைகேட்டறிந்த ஆற்காட்டார், இதற்கெல்லாம் போய் தலைவரை தொந்தரவு செய்யவேண்டாம். ஸ்டாலினிடம் பேசுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்டாலினிடம் மேட்டர் போயுள்ளது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுசமாதானப்படுத்திய ஸ்டாலின், ராஜேந்தரை போனில் பிடித்து காய்ச்சிஎடுத்துள்ளாராம். இதனால் ராஜேந்தர் பயந்து விட்டார். நயனதாராவை மறுபடியும்தொடர்பு கொண்ட சிம்புவின் நிலையை சொல்லி இறங்கி வாம்மா என்று கெஞ்சாதகுறையாக கேட்டுள்ளார்.

ஆனால் தனது முடிவில் மாற்றம் இல்லை என்று உறுதியாக கூறிய நயனதாரா, சிம்புசாப்டரை குளோஸ் செய்து விட்டாராம்.

இப்போது நயனதாரா கையில் 2 தெலுங்குப் படங்கள் உள்ளதாம்.ஹைதராபாத்திலேயே முகாமிட்டு தீவிரமாக நடித்து வருகிறாராம். தொடர்ந்துதெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தப் போகிறாராம். ஹைதராபாத்திலேயே வீடுவாங்கி செட்டிலாகும் அளவுக்கு தீவிரமாக யோசித்து வருகிறாராம்.

இதற்கிடையே சிவாஜி படத்தில் ரஜினியுடன் நயனதாரா ஆடியுள்ள ஆட்டம் படுஅட்டகாசமாக வந்துள்ளதாம். ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டக்கலைஞர்களுடன் சேர்ந்து ரஜினியும், நயனதாராவும் ஆடியுள்ள ஆட்டம், ரசிகர்களைத்துள்ள வைக்கும் என்கிறது சிவாஜி பட யூனிட்.

நயனதாரா ஆட ஆரம்பித்து விட்டார். சிம்பு ஆட்டம் காண ஆரம்பித்து விட்டார்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil