»   »  நயன்-மம்தா.. இம்புட்டு ஆகாது!

நயன்-மம்தா.. இம்புட்டு ஆகாது!

Subscribe to Oneindia Tamil

மலையாளிகள் இருவர் சந்தித்துக் கொண்டால் ஊர் பாசம், உலகப் பாசத்தைக் காட்டிப் பேசிக் கொள்வார்கள்என்று கூறப்படுவதுண்டு. ஆனால் பக்கத்து பக்கத்தில் நான்கு மணி நேரம் அமர்ந்தும், ஒரு தும்மல் கூடப்போடாமல், படு கமுக்கமாக பயணித்த இரண்டு மலையாள நடிகைகள் பற்றிய கதை இது.

நயனதாராவும், மம்தா மோகன்தாஸும் தான் அந்த பேசா மடந்தைகள். சிம்புவிடமிருந்து பிரிந்த சூட்டோடுதெலுங்குக்குத் தாவிய நயனதாரா இப்போது யோகி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்குஜோடியாக நடிப்பவர் பிரபாஸ்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல் ஒன்றை வெளிநாட்டில் சுட்டார்கள். இதை முடித்து விட்டு நயனதாரா, கத்தார்தலைநகர் தோஹா வழியாக ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்திருந்தார்.

அப்போது அங்கே எதிர்பாராத விருந்தாளி ஒருவரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அவர் மம்தாமோகன்தாஸ். இவரும் கேரளத்து சேச்சிதான். சிவப்பதிகாரம் படத்தில் விஷாலுடன் ஜோடி போட்டவர்.

இவரது அப்பாவும், அம்மாவும் பஹ்ரைனில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைப் பார்க்க பஹ்ரைன் வந்திருந்தார்மம்தா. பெற்றோரைப் பார்த்து விட்டு அவரும் ஹைதராபாத் செல்வதற்காகவே தோஹா வந்திருந்தார்.

நயனதாரா அண்ட் கோவும், மம்தாவும் ஒரே விமானத்தில்தான் பயணித்தார்கள். அதிலும் மம்தாவும்,நயனதாராவும் பக்கத்து பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணித்தார்கள். ஆனாலும் இருவரும் திரும்பிக் கூடபார்க்கவில்லை, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லையாம்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரப் பயணத்தின்போது ஒருமுறை கூட இருவரும் பேசிக் கொள்ளாமலேயேஉம்மென்று உட்கார்ந்து வந்தனர். ஹைதராபாத் வந்து விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோதுநயனதாராவை ரசிகர் கூட்டம் சூழ்ந்து ஆட்டோகிராப் கேட்டது.

அப்போதுதான், நயனதாராவைப் பார்த்து நீங்களா, ஸாரி, மேக்கப் இல்லாததால் அடையாளம் தெரியவில்லைஎன்று நக்கலாக கூறி விட்டு நடையைக் கட்டினாராம் மம்தா.

கடுப்பாகிப் போன நயனதாரா, பதில் ஏதும் பேசாமல் லேசாக சிரித்து விட்டு விருட்டென்று கிளம்பிப்போனாராம். மம்தா, நயனதாராவின் இந்த பாசப் பிணைப்பைப் பார்த்து யோகி படக் குழுவினர் அரண்டு போய்விட்டார்களாம்.

என்னதான், சினிமா போட்டி இருந்தாலும் அதுக்காக இப்படியா என்று ஆட்டோகிராப் வாங்க வந்த ரசிகர்களும்வாய் பிளந்து ஆச்சரியப்பட்டபடி நகர்ந்தார்கள்.

இதெல்லாம் ரொம்ப ஓவர்தான்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil