»   »  சிம்புவை விரட்டிய நயனதாரா!

சிம்புவை விரட்டிய நயனதாரா!

Subscribe to Oneindia Tamil

நயனதாராவைப் பார்க்க ஹோட்டலுக்கு வந்த சிம்புவை, செக்யூரிட்டியை விட்டு வெளியேற்றி விட்டார்நயனதாரா.

சிம்பு, நயனதாரா விவகாரம் இப்போதைக்கு முடியும் என்று தெரியவில்லை. வார்த்தைகளை இரு தரப்பும்தாறுமாறாக விட்டு விட்டனர். இப்போது மீண்டும் நயனதாராவுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளவம்பாடுபடுகிறாராம் வல்லவன் சிம்பு.

சமீபத்தில் ஹைதராபாத்துக்குப் போன நயனதாரா அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த நயனதாராவை மீட் பண்ணமுயற்சித்தார். அவர் வருவதை அறிந்த நயனதாரா அடித்துப் பிடித்து கேரளாவுக்கு ஓடி விட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் நயனதாரா. தனுஷுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கநயநனதாரா ஒத்துக் கொண்டுள்ளார். செல்வராகவனின் உதவியாளர் ஜவஹர் இயக்கும் படம் இது. இதன்போட்டோ செஷனுக்காகவே சென்னைக்கு வந்திருந்தார் நயனதாரா.

தனது வருகையை படு ரகசியமாக வைத்திருந்தார் நயனதாரா. ஆனால் தனது உளவாளிகள் மூலம் அதைமோப்பம் பிடித்து விட்டார் சிம்பு. பார்க் ஹோட்டலில்தான் நயனதாரா தங்கியுள்ளார் என்பதை அறிந்த சிம்புநேராக அங்கு போனார்.

தான் யாரையும் பார்க்க விரும்பவில்லை, எனவே யாரையும் எனது அறைக்கு அனுமதிக்காதீர்கள் என்றுஏற்கனவே ஹோட்டல் நிர்வாகத்திடம் சொல்லி வைத்திருந்தார் நயனதாரா.

இந்த நிலையில் சிம்பு வந்து நிற்கவே, என்ன செய்வது என்று ஹோட்டல் நிர்வாகத்திற்குக் குழப்பம்.நயனதாராவைத் தொடர்பு கொண்ட அவர்கள், சிம்புவை அனுமதிக்கவா என்று கேட்டுள்ளனர்.

இதைக் கேட்டு கடுப்பான நயனதாரா, நான்தான் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்று சொன்னேனே!யாரையும் பார்க்க மாட்டேன், அவரை திரும்பிப் போகச் சொல்லுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

இதனால் ஸாரி சொல்லியுள்ளனர் செக்யூரிட்டிகள். ஆனால் அதை மீறி நயனதாராவின் அறைக்குச் செல்லமுயன்றுள்ளார் சிம்பு. ஆனால் நயனதாராவோ தனது முடிவில் பிடிவாதமாக இருக்கவே, செக்யூரிட்டிகள்சிரமப்பட்டு சிம்புவை அங்கிருந்து வெளியேற்றினார்களாம்.

மழை விட்டுடுத்து, தூவாணம் எப்போ நிக்குமோ?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil