»   »  சிம்பு, நயன், வம்பு!

சிம்பு, நயன், வம்பு!

Subscribe to Oneindia Tamil

மறுபடியும் நயனதாரா, சிம்புவைப் பற்றி கோலிவுட்டில் புரளி கிளம்பியுள்ளது. இரண்டு பேருக்கும் சண்டை,இதனால் மனமுடைந்த நயனதாரா தற்கொலைக்கு முயன்றார் என்பதுதான் லேட்டஸ்ட் வதந்தி.

வல்லவனில் நடிக்க ஆரம்பித்தவுடனேயே நயனதாராவுக்கும், சிம்புவுக்கும் பற்றிக் கொண்டு விட்டது.ஆரம்பத்தில் அரசல் புரசலாக வந்த செய்திகள் பின்னர் பெருசுப் படுத்தப்பட்டன.

இவர்களின் காதல் சேட்டை மற்றும் கலாட்டாக்களால் தான் வல்லவன் படமே பாதிக்கப்பட்டு படு தாமதமாகஎடுத்து முடிக்கப்பட்டதாகக் கூட கூறப்பட்டது. நினைத்தவுடன் சிம்புவும், நயனதாராவும் கிளம்பிப் போய்விடுவார்களாம்.

நயனதாரா ஷூட்டிங்குக்கு வராவிட்டால் சிம்பு உடனே ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு அவரைப் பார்க்கப் போய்விடுவாராம். இப்படி பலப் பல வதந்திகளுடன், ரீமா சென் பிரச்சினை என எக்கச்சக்கமான குழப்பங்களுடன் ஒருவழியாக வல்லவன் முடிந்து ரிலீஸ் ஆகி விட்டது. இப்போது நயனதாரா, சிம்பு விவகாரம் கிளைமேக்ஸைநெருங்கிக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இருவருக்கும் சண்டை, சிம்புவைப் பார்ப்பதை, பேசுவதை நயனதாரா தவிர்க்கிறார் அல்லது சிம்பு நயனதாராவைதவிர்க்கிறார் என மாறி மாறி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. உச்சகட்டமாக காதல் முறிந்து விட்டது,தோல்வியால் நயனதாரா துவண்டு விட்டார். அதனால் தற்கொலைக்கு முயன்றார் என்று புதுச் செய்திகிளம்பியுள்ளது.

ஏற்கனவே குழம்பிக் கிடக்கும் கோலிவுட்டாருக்கும், ரசிகர்களுக்கும் இந்த புது வதந்தி பெரும் குழப்பத்தைக்கொடுத்துள்ளது. இன்னாதான்யா நடக்குது என்று குழம்பியிருக்கிறார்கள் இவர்களின் காதல் செய்தியைதினந்தோறும் வாசிப்பவர்கள்.

ஆனால் தற்கொலை முயற்சியை நயனதாரா மறுத்துள்ளார். எனக்கும், சிம்புவுக்கும் உள்ள நட்பை, தொடர்பைபகிரங்கமாக வெளிப்படுத்த விரும்பவில்லை. இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். இது காதலாகுமா,கல்யாணத்தில் முடியுமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

வல்லவன் படத்தில் இணைந்து நடித்தோம். அடிக்கடி சந்திக்க முடிந்தது. இப்போது படம் முடிந்து விட்டது. வேறுபடங்களில் நான் நடித்து வருகிறேன். அதேபோல சிம்புவும் அவரது வேலைகளில் பிசியாக உள்ளார். எனவேமுன்பு போல அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியவில்லை.

இதை வைத்து காதல் முறிந்து விட்டது, மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றேன் என கதையைக் கிளப்பிவிட்டு விட்டார்கள். முதலில் எங்களுக்குள் காதலே கிடையாது. அப்படி இருக்கும்போது எப்படி அது முறியும்?அதிலும் எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் துணிச்சலும், மன தைரியமும் எனக்கு உண்டு.

நானும், சிம்புவும் நல்ல நண்பர்கள் என்று சொன்ன பிறகும் கூட இப்படிப்பட்ட செய்திகள் வருவது கஷ்டமாகஉள்ளது என்று புலம்புகிறார் நயன்.

அண்ணாத்தை என்ன சொல்கிறார்? நாங்க ரெண்டு பேருமே நண்பர்களாகத்தான் இருக்கிறோம். எங்களுக்குகல்யாணம் நடக்குமா, இல்லையா என்பதெல்லாம் எங்களது கையில் இல்லை. காலம் தான் சொல்ல வேண்டும்என்று பொத்தாம் பொதுவாக சொல்லி முடித்துக் கொண்டார்.

சாலமன் பாப்பையா பாணியில் சொல்லனும்னா, வெளங்கலய்யா...

Read more about: rumors on nayantara
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil