»   »  தாராவும் விரல் தம்பியும்!

தாராவும் விரல் தம்பியும்!

Subscribe to Oneindia Tamil

நயனதாராவுக்கு ரொம்பவும் தில் தான். இல்லாவிட்டால் மனம் கவர்ந்த நடிகருக்குகம்பெனி கொடுப்பதற்காக துபாய் வரை போவாரா என்ன?

சமீபத்தில் சென்னையில், தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களின் கிரிக்கெட் போட்டிநடந்தது. முதலில் இது துபாயில் நிடப்பதாக இருந்தது. ஆனால் சில பல சிக்கல்களால்அது ரத்து செய்யப்பட்டு சென்னைக்கு மாற்றப்பட்டது.

சிக்கல்களை சரி செய்த நிலையில் மீண்டும் துபாயில் கிரிக்கெட் போட்டியை நடத்தஏற்பாடு ஆனது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் இரு அணி நடிகர்களும் துபாய்சென்றனர்.

இந்தக் குழு துபாய் போனபோது ஒரு நடிகையும் அங்கு போனார். அந்த நடிகை வேறுயாருமல்ல நயனதாராதான்.


நயனதாரா கிரிக்கெட் விளையாடுவதற்காக அங்கு போகவில்லையாம். துபாயில்நடந்த கலை விழா ஒன்றில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டவேதுபாய் சென்றதாக ஒரு தரப்பு கூறுகிறது.

ஆனால் மேட்டர் வேறே என்கிறது இன்னொரு தரப்பு. கிரிக்கெட் விளையாடச் சென்றகுழுவில் வம்பு நடிகரும் இடம் பெற்றிருந்தார். அவரது மனம் கவர்ந்தவராச்சே தாராநடிகை. எனவேதான் அன்பு நடிகரின் வம்புத் தொல்லையைத் தட்ட முடியாமல்துபாய்க்குப் சென்றாராம்.

கிரிக்கெட் விளையாடிய நேரம் போக, தாராவும், வம்புவும் சேர்ந்தே பொழுதைக்கழித்தார்களாம். துபாயை சுற்றிப் பார்த்து சோர்ந்து போனார்களாம். தாராவும், அவரதுஅன்பு நண்பரும் இப்போது ரொம்பவே நெருங்கிப் பழகுகிறார்களாம்.

சென்னையில் இருவரும் ஃப்ரீயாக இருந்தால், வம்பு நடிகருக்கு நண்பரான இளவல்இசை ராஜாவின் இசையமைப்புக் கூடத்திற்குச் சென்று விடுகிறார்களாம்.


அங்கு அமர்ந்து நீண்ட நேரம் பேசி விட்டு

தங்களது கூண்டுகளை நோக்கிப் பறந்து விடுகிறார்களாம். இவர்களது நட்புக்குஇளவல் ராஜா நல்ல சப்போர்ட் ஆக இருக்கிறாராம்.

சில நேரங்களில் நயன் தங்கியுள்ள ஹோட்டலின் வெளியே கார் பார்க்கிங்கில் விரல்தம்பியின் காரும் நெடுநேரம் காத்திருப்பதாக சொல்கிறார்கள்.

இப்படித் தொடரும் இந்த பிணைக்க முடியாத நட்பு எங்கே போய் விடுமோ என்றுதேவையில்லாமல் புலம்புகிறார்களாம் சில கோலிவுட்காரர்கள்.

பிட் பிட்...

சில ஆண்டுகளுக்கு முன் பிரஷாந்துக்கு ஜோடியாக நடிக்க சென்னைக்கு வந்தார் நயனதாரா. அப்போது ஸ்டில் செஷன் நடத்தி நயனதாராவை பல போஸ்களில்சுட்டுவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். அதன் பிறகு ஐயா படம் மூலம் நுழைந்து சந்திரமுகி மூலம் வளர்ந்து இப்போது தனது உடலைப் போலவேசான்ஸ்களும் பல்கிப் பெருகி மகிழ்ச்சியில் இருக்கிறார் நயனதாரா.

இப்போது பிரசாந்த்துக்கு ஜோடியாக நடிக்க நயனதாராவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார்களாம். காலச் சக்கரம் என்ன வேகமா சுத்துது?

Read more about: nayanatara and dubai cricket
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil