»   »  நயனதாராவின் புகைச்சல்!

நயனதாராவின் புகைச்சல்!

Subscribe to Oneindia Tamil

காதல் நமைச்சல் போய் இப்போது வேறு ஒரு புகைச்சலில் சிக்கித் தவிக்கிறாராம் நயனதாரா.

வல்லவன், கெட்டவன் ஆன சோகத்தால் தமிழ் சினிமாவை விட்டு கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்த நயனதாரா சிவாஜி படத்தில் சிங்கிள் பாட்டுக்கு ஆடினார். அதன் பின்னர் தனுஷுடன் யாரடி நீ மோகினி, அஜீத்துடன் பில்லா என நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் முன்பு போல உற்சாகமாக இல்லை நயனதாரா. தான் உண்டு, தனது வேலை உண்டு என்று அமைதியாகி விட்டார். இந்த நிலையில் நயனதாராவின் உடல் நலம் பற்றி பல தகவல்கள் புகைய ஆரம்பித்துள்ளன.

அதில் முக்கியமானது அவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டதும், செயின் ஸ்மோக்கராக அவர் மாறி விட்டார் என்ற அதிர்ச்சித் தகவலும் ஒன்று.

சில வாரங்களுக்கு முன்பு கொச்சி விமான நிலையத்தில் மயக்கம் போட்டு விழுந்தாராம் நயனதாரா. ஊதி விட்ட உடலைக் குறைக்க சில உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார் நயனதாரா.

அதுதவிர லிப்போசக்ஷன் எனப்படும் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் வைத்தியத்தையும் அவர் மேற்கொண்டார். இதுதவிர சாப்பாட்டிலும் கடுமையான பத்தியம் இருந்து வருகிறார்.

இத்தனையும் சேர்ந்து அவரை பலவீனமாக்கி விட்டதாம். அதனால்தான் இந்த மயக்கமாம். இத்தனை கடுமையான முயற்சியால் அவரது உடம்பு இளைத்திருந்தாலும் அந்த பழைய வனப்பும், பொலிவும், உடல் அழகும் நயனதாராவிடம் இல்லை.

இதுதவிர இன்னொரு கெட்ட பழக்கத்தையும் கற்றுக் கொண்டு விட்டாராம் நயனதாரா.

கடந்த வாரம் ஹைதாரபாத்தில் உள்ள பப் ஒன்றுக்கு வந்தார் நயனதாரா. பிலிம்பேர் விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துக்காக அங்கு வந்திருந்தார் நயனதாரா.

அப்போது குண்டக்க மண்டக்க உற்சாக பானத்தை உள்ளே தள்ளினாராம். ஒரு கட்டத்தில் உச்சி மண்டையை போய் தாக்க மயக்கமாகி விட்டாராம். அவரது நண்பர்கள்தான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வீட்டில் விட்டனராம்.

அதிக அளவில் புகை பிடிக்க ஆரம்பித்துள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்துள்ளதாம். அவரது அழகான உதடுகளில் எது இருக்க வேண்டுமோ அது இல்லாமல் சிகரெட் ஆக்கிரமித்துள்ளதால், அழகிய உதடுகள் கருமையாகி விட்டனவாம். உதடே கலர் மாறி கண்றாவியாக இருப்பதாக நெருங்கிப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

இதை என்ன செய்யலாம் என்று அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள தனக்குத் தெரிந்த டாக்டர்களிடம் போய் உதட்டைக் காட்டியுள்ளார் நயனதாரா. அதற்கு ஒரே வழி சிகரெட்டை விடுவதுதான், வேறு வழியே இல்லை என்று உதடு பிதுக்கி விட்டனராம் அப்பல்லோ டாக்டர்கள்.

நயனதாராவின் இந்த கெட்ட பழக்கத்தை அறிந்த அவரது கோலிவுட் நண்பர்கள், எப்படியாச்சும் இந்தப் பழக்கத்தை விட்டுடும்மா, இது குலத்துக்கு ஆகாது என்று நயனதாராவுக்கு அட்வைஸ் செய்துள்ளனராம்.

அவனை விடச் சொல்லு, நான் விடுறேன் என்று நயனதாரா பதில் சொன்னாரா என்பது நமக்குத் தெரியவில்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil