»   »  எஸ்.ஜே.சூர்யாவுக்கு நயன் ஸாரி!

எஸ்.ஜே.சூர்யாவுக்கு நயன் ஸாரி!

Subscribe to Oneindia Tamil

எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் நடிக்க வந்த வாய்ப்பை, வேண்டாம் என்று தள்ளி விட்டு விட்டார் நயனதாரா.

கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு வசூல் ராணியாகத் திகழும் நயனதாரா, சூர்யாவுடன் வந்த வாய்ப்பைத் தட்டி விட்டதற்கு, கள்வனின் காதலி படப்பிடிப்பில் நடந்த கசப்பான சம்பவங்கள்தான் முக்கியக் காரணம் என கூறுகிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யாவின் சிஷ்யர் தமிழ்வாணன் இயக்கிய கள்வனின் காதலியில், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் நியன்ஸ். இப்படத்தின் பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளைப் படமாக்குவதற்காக பாங்காக் சென்றனர் படக்குழுவினர்.

சூர்யா உள்ளிட்டோர் முதலில் சென்று விட்டனர். ஆனால் நயனதாரா தனியாக கிளம்பிப் போனார். ஆனால் விபச்சாரத்துக்கு புகழ் பெற்ற பாங்காக்கில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்திறங்கும் பெண்களை அதிகாரிகள் கேள்விகளால் துளைத்துவிடுவது வழக்கம். நயனதாராவிடமும் சரியான ஆவணங்கள் இல்லை, இதையடுத்து விமான நிலையத்தில் அவர் சிக்கிக் கொண்டு, குடியேற்றத் துறை அதிகாரிகளால் உட்கார வைக்கப்பட்டார்.


பல மணி நேரம் விமான நிலையத்திலேயே தவித்த அவரை கூட்டிக் கொண்டு போக படப்பிடிப்புக் குழுவினர் ஒருவரும் வராததால் பெரும் அவதிக்குள்ளானார்.

பின்னர் ஒரு வழியாக மீண்டு வெளியேறிய நயனதாராவுக்கு எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையே பாங்காக்கிலேயே பிரச்சினை ஏற்பட்டது. கடுப்பாகவே பாங்காக்கில் தங்கி நடித்த நயனதாரா தனக்குத் தரப்பட்ட காஸ்ட்யூமை போட மாட்டேன் என்று சொல்ல, சூர்யாவுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இருவரும் வாடா போடா, போடி வாடி என்று ஒருமையில் திட்டிக் கொண்டதாக செய்திகள் வந்தன. கடுப்பாகிப் போன நயனதாரா,வேறு வழியில்லாமல் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினார்.

இத்தனைக்கும், சூர்யாவுக்கும், நயனாவுக்கும் நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருந்து வரத்தான் செய்தது. ஆனாலும் பாங்காக்கில் நடந்த சம்பவங்களால் நட்பு முறிந்துவிட்டது.

இந் நிலையில் இயக்குனர் பேரரசுவின் தம்பி முத்துவடுகு இயக்கத்தில் உருவாகும் பண்டிகை படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் யாரை ஹீரோயினாக போடலாம் என முத்துவடுகு, சூர்யா உள்ளிட்டோர் ஆலோசனையில் உட்கார்ந்துள்ளனர். பல பெயர்களைப் பரிசீலித்தும் ஒன்றும் சரியாக வரவில்லை. அப்போதுதான், எஸ்.ஜே.சூர்யா, சரி, நயனதாராவை கேட்டுப் பாருங்கள், அவர் சரியாக இருப்பார் என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.


சரி என்ற முத்துவடுகு, நயனாவுக்குப் போன் போட்டுள்ளார். புதுப் படம் தொடர்பாக பேச வேண்டும், வரட்டுமா என்று கேட்டுள்ளார். வாங்கோண்ணா, அட வாங்கோண்ணா என்று பாடாத குறையாக அழைத்துள்ளார் நயனா.

வடுகும் உடனே கிளம்பிப் போனார். கதையை சொல்லியதோடு ஹீரோ நம்ம எஸ்.ஜே.சூர்யா சார்தான் என்று முத்துவடுகு கூறவே, முகமெல்லாம் கருத்து விட்டதாம் <செவத்தம்மா< நயனதாராவுக்கு. அவரா, ஸாரி ஸார், இந்தப் படத்தில் என்னால் நடிக்க முடியாது, தப்பா நெனச்சுக்காதீங்க என்று கூறி விட்டாராம் நியனா.

ஏன், என்னாச்சு என்று முத்து வடுகு கேட்க, அது அப்படித்தான், என்னால இந்தப் படத்துல நடிக்க டியாது, அடுத்த படத்தில் வேண்டுமானால் பார்க்கலாம் என்று கூறி காப்பித் தண்ணி குடிக்க வைத்து முத்து வடுகை அனுப்பி வைத்துவிட்டாராம் நயனா.

அப்ப நிலாவையே புக் பண்ணிற வேண்டியது தானேன்னேன்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil