படமில்லை... பணமுமில்லை... என்ன செய்யப் போகிறார் நயன்தாரா?

By Chakra

பாஸ் என்கிற பாஸ்கரன்தான் நயன்தாராவின் கடைசி படம் என்று திரையுலகில் கூறப்படுவதை நேற்றே எழுதியிருந்தோம்.

இப்போது நயன்தாரா பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க அவர் ரூ 1 கோடி வரை வாங்கினாராம். ஆனால் இந்தப் பணத்தை நயன்தாரா வாங்கவில்லையாம். அவர் சார்பில் பிரபுதேவாதான் வாங்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே நிலையில் நிதி நெருக்கடியில் தவிக்கும் நயன்தாரா, தான் ஆசையாக வாங்கிய வெளிநாட்டுக் காரைக் கூட விற்றுவிட்டது நினைவிருக்கலாம்.

இப்போதும் புதுப்பட வாய்ப்புகள் சில நயன்தாராவுக்கு வரத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை முற்றாக நிராகரிக்கும் நயன், விளம்பரப் படங்கள் ஒன்றிரண்டில் நடித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

இனி நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு குடும்பம் நடத்தினால் போதும் என்று நயன்தாராவுக்கு கூறிவிட்ட பிரபுதேவா, அடுத்தடுத்து புதிய படங்களை இயக்குவதில் தீவிரமாகியுள்ளார்.

நயன்தாராவுக்கும் சேர்த்து அவர் இப்போது சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம். இதன் விளைவாக தமிழில் அஜீத்துக்கு கதை சொல்லியிருக்கும் பிரபுதேவா, தெலுங்கு மற்றும் இந்தியில் தலா ஒரு படம் இயக்கவும் கையெழுத்திட்டுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X