»   »  "குண்டான நயன்தாரா

"குண்டான நயன்தாரா

Subscribe to Oneindia Tamil

நயன்தாராவின் எடை ஒரு சில மாதங்களில் 6 கிலோ அதிகரித்து விட்டதாம். எல்லாம் அடுத்தடுத்து படங்கள் புக்காவதால்ஏற்பட்ட சந்தோஷம் தான் காரணம்.

கோலிவுட்டில் நயன்தாரா ஜோடி சேரும் நாயகர்களின் பட்டியல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஐயாவில் மூத்த நடிகரானசரத்குமாருடன் ஜோடி சேர்ந்தார். இதற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகியில் நடித்தார்.

இப்படி மூத்த நடிகர்களுடன் ஜோடி போட்ட அதே வேகத்தில் கோலிவுட்டின் இளம் ஹீரோக்களில் ஒருவரான சிம்புவுடன்வல்லவனில் இணைந்துள்ளார். அப்படியே ஒரு சைடில் எஸ்ஜே சூர்யாவுடன் கள்வனின் காதலி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஆனால் மலையாளத்தில் இவர் மூத்த நடிகர்களுடன் மட்டும் தான் அதிகமாக நடித்துள்ளார். மம்முட்டி, மோகன்லால், ஜெயராம்இப்படி நீள்கிறது இவரது மூத்த ஹீரோக்களின் பட்டியல்.

மலையாளத்தில் நடித்த போது அவ்வளவாக அறியப்படாமல் இருந்து வந்த நயன்தாரா தமிழுக்கு வந்த பின்னர் தான்தென்னகம் முழுவதும் புகழ் பெறத் தொடங்கினார். அதுவும் சந்திரமுகி வந்த பிறகு தெலுங்கு, கன்னடம் என இவரது பெயர்பரவத் தொடங்கியது.

இந்த நன்றிக் கடனுக்காகத் தானோ என்னவோ மலையாளத்தை விட தமிழுக்கு இப்போது பல வகையிலும் முக்கியத்துவம்அளித்து வருகிறார் நயன். அந்த முக்கியத்துவம் என்ன என்பது எஸ்ஜே சூர்யாவின் கள்வனின் காதலியியும், சிம்புவின்வல்லவனும் வெளிவந்தால் உங்களுக்கே தெரிந்து விடும்.

இப்போது இவர் கடைசியாக ஜோடி சேர்ந்திருப்பது இன்னொரு இளம் நாயகன் ஜீவாவுக்கு. இயற்கை படத்தை டைரக்ட் செய்தஜனநாதன் இயக்கும் "ஈ என்ற படத்தில் தான் ஜீவாவுடன் இணைகிறார் நயன்.

இந்தப் படத்திற்கு நயன்தாரவை ஜீவாவுக்கு ஜோடியாக்க என்ன காரணம் என்று இயக்குனர் ஜனநாதனுடன் கேட்டோம்.கதைப்படி இந்தப் படத்தில் ஜீவாவை விட சற்று முதிர்ச்சியான நாயகி எங்களுக்குத் தேவைப்பட்டது.

அப்படி முதிர்ச்சியான நாயகிகளுக்கு வலைவீசிய போது தான் நயன்தாரா சிக்கினார். உடனே நாங்கள் அவரை நாடிச்சென்றோம். சம்மதிக்க மாட்டார் என்று தான் நினைத்தோம். கதையைக் கேட்டதும் அவர் உடனே நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டார் என்கிறார் ஜனநாதன்.

தமிழில் கால் பதித்த யோகம், நயன்தாராவுக்கு இந்தியிலும் வாய்ப்பு கிடைத்தது.இப்படி அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துகதவைத் தட்டுவதால், கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் ஒரு சுற்று பெருத்து விட்டாராம் நயன்.

அதுவும் 6 கிலோ அதிகரித்து விட்டது. எங்கே, பிந்துகோஷ், சரிதா மாதிரி ஆகிவிடுவோமோ என பயந்த இவர், உடனடியாகஜிம்முக்கு போய் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கினார்.

ஆனால் அங்கும் வந்தது நயனுக்கு சிக்கல். திடீரென எடையைக் குறைத்தால் முகத்தில் சுருக்கம் விழுந்து விடும் என்று யாரோஒருவர் குண்டைத் தூக்கிப் போட, என்ன செய்வது என்று தெரியாமல் வருவது வரட்டும் என்ற முடிவில் இருக்கிறாராம் நயன்.

என்னடா இது, சந்தோஷத்தில் உடம்பு குண்டானால் கூட சிக்கலா?

Read more about: nayanthara acts with jeeva

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil