அவருக்கு பாசிட்டிவ்.. இவருக்கு நெகட்டிவா? அடுத்த படத்துக்கும் விமர்சகருக்கு வெயிட்டான கவனிப்பாம்!

By Staff

சென்னை: நூடுல்ஸ் செய்ய ஆகும் நேரத்தை விட குறைவாக விமர்சனத்தை சொல்லி முடிக்கும் அந்த நெகட்டிவ் விமர்சகர் தேவையில்லாமல் அந்த நடிகருடன் வம்பிழுத்து இந்த வாரத்துக்கான பிழைப்பை ஓட்டுகிறார் என நடிகரின் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

சினிமாவில் தனக்கு பிடித்தவர்களுக்கு ஒரு மாதிரியும், பிடிக்காதவர்களுக்கு ஒரு மாதிரியும் செயல்பட்டு வருகிறார் அந்த விமர்சகர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் ஒல்லி நடிகர் நடித்த படத்தை பாராட்டி பேசிய அவர், தற்போது வம்பு நடிகர் படத்துக்கு மட்டும் தேவையில்லாமல் வம்பு பண்ணுவது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விமர்சனத்துக்கு காசு

விமர்சனத்துக்கு காசு

விமர்சகர் என்கிற அடையாளத்தை அடைந்து விட்டாலே, அதற்கு பின்னர் புதிய படங்கள் வரும் போது பெரிய நடிகர்கள் சிலரை நன்றாக கவனிப்பதும் சிலரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் வாடிக்கையாக உள்ளது. நன்றாக கவனிப்பவர்கள், கொடுத்ததற்கு மேல் கூவுவதும், கவனிக்கப்படாதவர்கள் குறைகளை அடுக்கி அவதூறுகளை பரப்புவதும் வாடிக்கையாகி வருகிறது.

நெகட்டிவ் விமர்சகர்

நெகட்டிவ் விமர்சகர்

சினிமாவில் பலருடன் பகையை வளர்த்துக் கொண்டுள்ள அந்த சினிமா விமர்சகரை பலரும் அந்த காரணத்திற்காகவே பைசா தராமல் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே அவரை பகைத்துக் கொள்ளக் கூடாது என பக்குவமாக கவனித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அவருக்கு ஆதரவு

அவருக்கு ஆதரவு

சமீபத்தில் வெளியான ஒல்லி நடிகரின் அரத பழசுக் கதையை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து ஹிட் அடிக்க வைத்திருந்தார் இந்த நெகட்டிவ் விமர்சகர். தொடர்ந்து அந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியான படங்களை எல்லாம் இவர் கழுவி ஊற்றி வந்த நிலையில், திடீரென இந்த நடிகர் படத்தின் மீது மட்டும் என்ன கரிசணை என அப்போதே விமர்சனங்கள் கிளம்பின.

வம்பு நடிகருடன் வம்பு

வம்பு நடிகருடன் வம்பு

இந்நிலையில், தற்போது வம்பு நடிகருடன் தொடர்ந்து வம்பு செய்ய அந்த நெகட்டிவ் விமர்சகர் ஆரம்பித்துள்ள நிலையில், வம்பு நடிகர் படத்தை தாக்கிப் பேசவும் அவருக்கு பைசா வழங்கப்பட்டுள்ளதா? என்கிற கேள்வியை சினிமா துறையில் இருக்கும் சில பிரபலங்களே எழுப்பி உள்ளது தான் கோடம்பாக்கத்தில் தற்போது பெரிதாக புகையத் தொடங்கி உள்ளது.

பிரம்மாண்ட படத்துக்கு எதிராகவும்

பிரம்மாண்ட படத்துக்கு எதிராகவும்

இதுமட்டுமின்றி சீக்கிரம் வெளியாகவுள்ள அந்த பிரம்மாண்ட படத்துடன் ஒல்லி நடிகரின் படம் போட்டியாக வரவுள்ள நிலையில், நெகட்டிவ் விமர்சகருக்கு மேலும் வெயிட்டான கவனிப்பு நடந்துள்ளதாகவும், அந்த படத்தை மட்டம் தட்டி பேசவும், இந்த படத்தை பாராட்டி விமர்சனம் செய்யவும் போகிறார் என பேச்சுக்கள் இப்போதே கசியத் தொடங்கி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X