பூனையும் பால் குடிக்குமா? வாயால் மாட்டிக்கொண்ட நடிகர்.. வண்டவாளம் தண்டவாளம் ஏறிப்போச்சே!
சென்னை: சினிமாவில் டான்ஸ், டைரக்ஷன், ஆக்டிங் எனப் பன்முகத்திறமையோடு வலம் வரும் அந்த டாப் நடிகர், சமீபகாலமாகத் தீவிரமாகத் தன்னை ஒரு சமூக ஆர்வலராகக் காட்டி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு பல நற்பணிகளைச் செய்து வந்தவர், திடீரென தனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதை ஒரு வீடியோ மூலம் மறைமுகமாக வெளிப்படுத்தி இருந்தார். முன்பெல்லாம் என் அம்மா அரசியல் ஒரு சாக்கடை என்பார், ஆனால் இப்போது புதிதாகக் கட்சித் தொடங்கியுள்ள அந்த 'டாப் ஹீரோ காசு கொடுக்காமல் வென்றதைப் பார்த்துவிட்டு, என்னை அரசியலுக்குப் போகச் சொல்கிறார். நான் வரட்டுமா, வேண்டாமா? என்று மக்களிடமே கேட்டிருந்தார்.
வீடியோ வெளியிட்டது வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், அதன் பிறகு நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் அந்த நடிகர் பேசிய பேச்சுதான் அவரை 'ட்ரோல் மெட்டீரியலாக' மாற்றியுள்ளது. அந்த கட்சியின் தலைவர் ஆறு மாதம் நேரம் கேட்டிருக்கிறார். அதற்குள் தவறு சொல்வது சரியல்ல. நாய்க்கு பிஸ்கட் பிடிக்குமா, கறி சோறு பிடிக்குமா என்று தெரிந்துதான் நாம் போட வேண்டும் பேசி வாயை கொடுத்து மாட்டிக்கொண்டார். வாக்களித்த மக்களை நாய் என்றது, சோசியல் மீடியாவில் தீயாய் பரவியது. ஓட்டுப்போட்ட மக்களைப் பார்த்து இப்படியா பேசுவது? என்று பொதுமக்களும் நெட்டிசன்களும் கொதித்தெழுந்து நடிகரைக் கண்டபடி திட்டி வருகின்றனர்.

படுக்கையறை பஞ்சாயத்து: நடிகரின் இந்த சர்ச்சை பேச்சால் கடுப்பான நெட்டிசன்கள், அவரது கடந்த கால ரகசியங்கள் அனைத்தையும் தோண்டித் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு, பக்கத்து மாநிலத்தைச் சேர்ந்த நடிகை இந்த நடன நடிகர் மீது கொடுத்த புகார் இப்போது மீண்டும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. பட வாய்ப்பு தருவதாக என்னை அவரது அறைக்கு அழைத்து, உன்னுடைய உதடு, இடை, அழகெல்லாம் சூப்பராக இருக்கிறது என்று வர்ணித்து என்னை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். அதன் பிறகு வாய்ப்புக் கேட்டுப் போன் செய்தால் என் அழைப்பை எடுக்காமல் துரோகம் செய்துவிட்டார் என்று அந்த நடிகை மேலாடை இல்லாமல் போராட்டம் நடத்தியது அன்றைக்கு பரபரப்பாக பேசப்பட்டது.
சீட்டுக்காகவா?: இத்தனை ஆண்டுகாலம் எழைய எளிய மக்களின் காவலன் என மார்தட்டிக்கொண்ட நடிகரின் உண்மை முகம் இப்போதுதான் தெரிகிறது. உங்களுக்கு சீட்டு வேண்டும் என்றால், நேரடியாக அந்தக் கட்சியின் தலைவரிடம் போய் கேட்க வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு செய்தியாளர்கள் முன்னால் வந்து இப்படிச் சல்லித்தனமாகப் பேசலாமா என்றும், இந்த பூனையும் பால் குடிக்குமா? என்கிற ரேஞ்சில் வலம் வந்த நடிகரின் சுயரூபம் இப்போது வெளிவந்துவிட்டதாகக் கூறி, இணையவாசிகள் அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications