அப்போ நான் யாரு.. பாடவும் நடிக்கவும் தெரிஞ்ச வாரிசு நடிகைக்கு புது வரவால் வந்த ஈகோ!

By Staff

சென்னை: கோலிவுட்டில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. புதிய வரவாக வந்துள்ள அவருக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தாலும் மறுபுறம் நெட்டிசன்கள் க்ரிஞ்ச் மேக்ஸ் என கலாய்த்து வருகின்றனர்.

புது வரவு வெறும் வாரிசு நடிகை மட்டுமல்ல என்றும் தனக்கு நல்லா தமிழ் பேசவும், பாடவும் வரும் என பந்தா காட்டி வரும் நிலையில், ஏற்கனவே இந்த திறமைகளுடன் சான்ஸ் கிடைக்காமல் சுற்றி வரும் அந்த வாரிசு நடிகைக்கு ஈகோ எட்டிப்பார்த்துள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

அந்த நடிகையின் தங்கச்சிக்கு அதை விட பொறாமை பொத்துக் கொண்டு வந்திருப்பதாக கூறுகின்றனர்.

க்ரிஞ்ச் மேக்ஸ்

க்ரிஞ்ச் மேக்ஸ்

புதிய வரவாக வந்துள்ள அந்த வாரிசு நடிகையை ஓவராக பேச விட்டது தப்பா போச்சோ என படக்குழுவினர் வருத்தப்படும் அளவுக்கு க்யூட் என்கிற பெயரில் க்ரிஞ்ச் மேக்ஸாகவே மாறி விட்டார் அந்த அறிமுக நடிகை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இன்னொரு புறம் அவர் வெறும் நடிகை மட்டுமல்ல அவருக்கு ஆய கலைகள் 64ம் தெரியும் என்கிற ரேஞ்சுக்கு சில பிரபலங்களே பாராட்டியது மற்றொரு வாரிசு நடிகைகளை பொறாமைப்பட வைத்துள்ளதாக பேச்சுக்கள் வெளியாகி உள்ளன.

குட்டி பகை ஆடு உறவு

குட்டி பகை ஆடு உறவு

ஆடு பகை குட்டி உறவு என்பதை கேள்விப் பட்டிருப்போம். ஆனால், இங்கே கதையே அப்படியே உல்டாவாக மாறி உள்ளது. பெரியவர்கள் இப்போதுதான் மீண்டும் இணையலாம் என நினைத்துக் கொண்டிருக்கையில், வாரிசுகள் இடையே ஈகோ கிளாஷ் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அப்போ நான் யாரு

அப்போ நான் யாரு

அந்த இளம் வாரிசு நடிகை பாட்டு பாடுறா, நடிக்கிறான்னா.. அப்போ நான் யாரு? நானும் ஏகப்பட்ட திறமைக்கு சொந்தக்காரி தானே, எனக்கு ஏன் பெரிய வாய்ப்புகள் வரவில்லை என நடிகை டென்ஷன் ஆகி விட்டாராம். அதற்கு அவர் உடன் இருக்கும் வெல்விஷர்கள் ஆரம்பத்தில் உங்களுக்கு கிடைத்தது தான் இப்போ அவருக்கு கிடைக்கிறது. போக போக திறமை இருந்தால் நீடிப்பார் என்று வெளிப்படையாக பேசியது நடிகையை கோபத்தில் ஆழ்த்தி உள்ளதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

தங்கச்சிக்கு ஒரே அழுகாச்சி

தங்கச்சிக்கு ஒரே அழுகாச்சி

அக்கா கூட சில பெரிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஆனால், நமக்கு அது போல ஒன்று கூட சரியாக அமையவில்லையே, பாலிவுட்டில் எல்லாம் வாரிசு நடிகைகளுக்கு எப்படி வாய்ப்புகள் குவிகின்றன என நெப்போடிசத்தை உரக்கப் பேசி பொறாமைப்பட்டுள்ளார் என்றும் கோடம்பாக்கத்தில் ஒரே சலசலப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X