»   »  நீ அரைச்ச மாவு புளிச்சு, ஊசிப் போச்சும்மா: நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்

நீ அரைச்ச மாவு புளிச்சு, ஊசிப் போச்சும்மா: நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவரை பிரிந்த இளம் நடிகை ஒருவர் பேட்டிக்கு பேட்டி சொன்னதையே திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.

இயக்குனர் ஒருவரை காதலித்து மணந்த நடிகை அவரை பிரிந்து விவாகரத்து பெற்றுவிட்டார். விவாகரத்திற்கு பிறகு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

எப்பொழுது பேட்டி கொடுத்தாலும் நான் மிகவும் இளம் வயதில் திருமணம் செய்தது தவறாகிவிட்டது, திருமண வாழ்க்கையில் பல வலிகளை அனுபவித்தேன், தற்போது சுதந்திரமாக உள்ளேன் என்கிறார்.

மேலும் நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்வேன். என் முதல் கணவர் என் வாழ்வில் வந்தது நல்ல விஷயம். அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று பேட்டிக்கு பேட்டி கூறுகிறார்.

இதை பார்க்கும் ரசிகர்களோ இந்த நடிகைக்கு வேறு வேலையே இல்லையா, எப்ப பார்த்தாலும் அரைச்ச மாவையே அரைக்குது என்று சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

English summary
Netizens are making fun of a young actress who keeps repeating the same sentences in every interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil