»   »  உங்கப்பா பெயரை கெடுப்பதே நீங்க தான்: விரல் வித்தை நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்

உங்கப்பா பெயரை கெடுப்பதே நீங்க தான்: விரல் வித்தை நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்படிப்பட்ட அப்பாவுக்கு இப்படிப்பட்ட ஒரு புள்ளையா என்று மக்கள் விரல் வித்தை நடிகரை பற்றி பேசுகிறார்கள்.

தனது அப்பாவை கலாய்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விரல் வித்தை நடிகர். அவர் பேசிய வீடியோ டிவி நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. அவர் வீடியோவில் அமைதியாக பேசியிருந்தாலும் அதை பார்த்து பலர் பொங்கியுள்ளனர்.

Netizens slam an actor

உங்கப்பாவுக்கு ஒரு கெட்டப் பழக்கமும் இல்லை என்கிறீர்கள் அப்படிப்பட்டவரின் பிள்ளையான உங்களுக்கு மட்டும் ஏன் அனைத்து கெட்டப்பழக்கங்களும் உள்ளது என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஒரு பெண்ணோடு ஒழுக்கமாக வாழும் தந்தையை பார்த்தாவது நீங்கள் திருந்தியிருக்க வேண்டாமா என்றும் சிலர் கேட்டுள்ளனர். முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள் அதன் பிறகு ஊராருக்கு அட்வைஸ் பண்ணலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

உங்க அப்பாவின் பெயரை கெடுப்பதே நீங்கள் தான் சார். அவருக்கு இருக்கும் நல்ல பழக்கங்கள் உங்களுக்கு ஏன் இல்லை என்று கேட்டுள்ளனர்.

English summary
Netizens are blasting an actor who lashed out at people who troll his father. Netizens advise him to mend his ways as he is the one who is spoiling his dad's name.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X