எப்படி எல்லாமோ ஐஸ் வைக்கும் ஒல்லி நடிகை.. மீண்டும் சிக்குவாரா அந்த மாஸ் ஹீரோ.. கோலிவுட் கிசுகிசு!

சென்னை: அந்த மாஸ் நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த ஒல்லி நடிகை பண்ண இசைக் கச்சேரி வேற லெவலில் வைரலாக, ஏகப்பட்ட குட்டிக் கதைகள் கோலிவுட்டில் உலா வர தொடங்கி விட்டன.

மாஸ் நடிகரின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. ரசிகர்களுடன் சேர்ந்து ஏகப்பட்ட பிரபலங்கள் அந்த மாஸ் ஹீரோவுக்கு வாழ்த்துக்களை சொல்லி வந்தனர்.

சிலர், அவரது பார்வை தங்கள் மேல் விழ வேண்டும் என சில வித்தைகளையும் பிறந்தநாளில் செய்தது குறிப்பிடத்தக்கது.

இரு முறை

இரு முறை

அந்த மாஸ் நடிகருடன் கடவுள் பெயர் கொண்ட படம் மற்றும், அரசியல் படம் என இரு படங்களில் நடித்து பிரபலமானவர் அந்த ஒல்லி நடிகை. நல்லா இருந்த தனது உடல் எடையை பலாக்காயை நம்பி ஏமாந்து குறைத்துக் கொண்டு தற்போது, மோசமான தோற்றத்துடன் ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார்.

படு ஃப்ளாப்

படு ஃப்ளாப்

சமீபத்தில் வெளியான அந்த ஒல்லி நடிகையின் படம் ஒரு நாள் கூட ஒழுங்காக ஓடாமல் படு ஃப்ளாப் ஆனது. நடிகையின் நடிப்பு நல்லா இருந்தாலும், அவரது ஒல்லியான தோற்றத்தை பார்த்தால், பயத்துக்கு பதிலாக சிரிப்பு தான் வருகிறது என பலரும் பங்கமாக கலாய்த்தும், மீம்களை போட்டும் ஒட்டுமொத்தமாக அந்த படத்தை காலி செய்திருந்தனர்.

இசைக் கச்சேரி

இசைக் கச்சேரி

இந்நிலையில், அந்த மாஸ் நடிகரின் பிறந்தநாளை முன்னிட்டு, தனக்கு தெரிந்த திறமைகளை ஒன்று திரட்டி, இசைக் கச்சேரி ஒன்றை நடத்தி அசத்தியிருந்தார் அந்த ஒல்லி நடிகை. அவரது திறமையை பார்த்த பல பிரபலங்களும் சூப்பரா இருக்கு என பாராட்ட, ரசிகர்கள் வேற லெவலில் அதை வைரலாக்கி உள்ளனர்.

ஐஸ் வைக்கிறார்

ஐஸ் வைக்கிறார்

இந்நிலையில், சில நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில், மறுபடியும் அந்த மாஸ் ஹீரோவுடன் ஜோடி போட்டு நடிக்க இன்னாம்மா ஐஸ் வைக்கிறார் பாருங்க, சமீபத்தில் வந்த படமும் ஓடவில்லை. இனிமேல், தனக்கு கோலிவுட்டில் மார்க்கெட் அவுட் என அறிந்ததும் இப்படியெல்லாம் டிசைன் டிசைனா வித்தை காட்டுகிறார் என கலாய்த்து கமெண்ட் செய்துள்ளனர்.

நிறைய இருக்கு

நிறைய இருக்கு

ஆனால், அந்த நெட்டிசன்களின் கமெண்ட்டுகளை மறுத்துள்ள அந்த ஒல்லி நடிகையின் ரசிகர்கள், மலையாளம், தமிழ் என உச்ச நட்சத்திரங்களின் படங்களே அவரது நடிப்பில் வெளிவர காத்திருக்கிறது. நட்பு காரணமாகவே இப்படி ஒரு இசைக் கச்சேரியை செய்துள்ளார். மற்றபடி அவரது மார்க்கெட்டுக்கு எந்த ஒரு குறையும் இல்லை என முட்டுக் கொடுத்து வருகின்றனர்.

ஜோடி யார்

ஜோடி யார்

அந்த மாஸ் நடிகரின் பிறந்தநாளில், அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும், ஹீரோயின் யார் என்று அறிவிக்கப்படும் என ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்த நிலையில், எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், அடுத்த படத்தில் மீண்டும் அந்த மாஸ் நடிகருடன் நடிக்க அந்த ஒல்லி நடிகை முயற்சி செய்து வருவதாக கோலிவுட்டில் ஒரு டாக்கும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X