அப்போ புரியல.. இப்போ புரியுது.. ஆண்களுக்கு எதிராக அந்த நடிகை போட்ட டிவீட்டுக்கு இதுதான் காரணமா?
சென்னை: பிரபல நடிகை சமீபத்தில் பதிவிட்ட பதிவுக்கு பின்னால், இப்படியொரு காரணம் இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
ஆடையின்றி நிர்வாணமாக துணிச்சலாக நடித்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அந்த முன்னணி நடிகை.
ஆனால், அந்த படத்திற்கு பிறகு, புதிய பட வாய்ப்புகள் ஏதுமின்றி, மார்க்கெட் இழந்து தவித்து வருகிறார்.

தகாத உறவு
முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நடிகைக்கும், அந்த பிரபல நடிகருக்கும் தகாத உறவு உள்ளதாக கிளம்பிய வதந்திகள் கோலிவுட்டில் பயங்கரமாக பேசப்பட்டன. இதனால், அந்த நடிகையை மணமுடித்த அந்த இயக்குநர் கடைசியாக விவாகரத்து செய்து கொண்டு வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டார்.

மறுப்பு
தொடர்ந்து சில முன்னணி ஹீரோக்களுடன் தனது பெயரை வைத்து அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்த நிலையில், அதனை உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த பிரபல நடிகை, தங்களுக்குள் அப்படியொன்றும் இல்லை. இது முற்றிலும் வேலை வெட்டி இல்லாதவர்களின் கட்டுக் கதை என வெளிப்படையாக பேசினார்.

ஆண்களுக்கு எதிரான பதிவு
காதல் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பெண்களை ஆண்கள் பல காலமாக ஏமாற்றி வருகின்றனர் என சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். அந்த கருத்துக்கு பாராட்டுக்களும், யாரை குறிப்பிட்டு சொல்கிறார் என்ற சர்ச்சைகளும் கிளம்பின.

அப்போ புரியல.. இப்போ புரியுது
சமீபத்தில் அந்த நடிகையின் முன்னாள் கணவனுக்கு இரண்டாவதாக நடைபெற்ற திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. கோலிவுட்டில் பலரும் அதை கொண்டாடி வருகின்றனர். அவரது இரண்டாவது மனைவி கர்ப்பமாகி இருக்கும் செய்தியை அறிந்து கொண்டு தான் அப்படியொரு ஆண்களுக்கு எதிரான பதிவை அந்த நடிகை போட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பேசிக் கொள்கின்றனர்.

புரியாத மாதிரி
மேலும், அந்த நடிகைக்கு இரண்டாவதாக திருமணம் ஆனதாக சமீபத்தில் வெளியான புகைப்படங்கள் வைரலான நிலையில், அவரையும் பிரிந்து விட்டார் என்றும், தற்போது தனிமையில் வாடி வரும் அவர், அடிக்கடி புரியாத மாதிரி கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும், கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











