Breakup சோகத்தில் இருந்த நடிகை.. ஆறுதல் சொல்ல போய் உஷாராக்கிய கில்லாடி நடிகர்.. விரைவில் டும் டும்

By Staff

சென்னை: இந்த நடிகை தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் இந்திய அளவில் அறியப்படும் நடிகை இவர். சினிமா வாய்ப்பை நடிகை தேடிக் கொண்டு இருந்த காலகட்டத்தில் நடிகையை பலரும் இழிவாக பேசி உள்ளார்கள். நீ எல்லாம் நடிகையா?.. அதுவும் கதாநாயகியா? இந்த உடம்பை வெச்சுக்கிட்டா நீ நடிக்கப் போற? கிளாமர் காட்சிகள் எடுக்கனும்னா உனக்கு டூப் போடனும் போலவே என்று எல்லாம் மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார்கள்.

ஆனால் நடிகை பேசுற வாய் ஆயிரம் பேசப்பட்டும் என்னிடத்தில் திறமை உள்ளது. என்னை உதாசினப்படுத்தியவர்களை என்னை நோக்கி வர வைப்பேன் என்று எடுத்த சபதத்தில் நடிகை வெற்றி பெற்றார் என்று தான் கூற வேண்டும். அப்படி நடிகை தனது திறை வாழ்க்கையைத் தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே நடிகைக்கும் ஒரு பிரபல வளர்ந்து வரும் நடிகருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. இவர்கள் காதல் ஊர் அறிந்த கதையாகவும் இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் இவர்கள் வெளிநாட்டில் ஒன்றாக சுற்றிய கதைகளை எல்லாம் திரை உலகம் பேசிக் கொண்டுதான் இருந்தது. அப்படி இருக்கையில் நடிகையும் அந்த நடிகரும் திருமணம் செய்து கொள்ள எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றது. திருமண தேதியும் நெருங்கிய நிலையில் காதலித்தவரை கரம் பிடிக்கப் போகிறோம் என்ற ஆசையில் நடிகை இருந்தார். திருமண ஏற்பாட்டில் ஏற்பட்ட சில பிரச்னைகள் தொடங்கி, நடிகரின் ரகசிய உறவு என எல்லாம் வெளிப்பட திருமணம் நின்றுவிட்டது.

Actress Gossip New Power Couple Alert How a consoling friendship turned into a surprise wedding for this star actress

பிரேக் அப் சோகம்: இப்படி இருக்கையில் நடிகை பெரும் சோகத்தில் இருந்தார். தான் கமிட் ஆன படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டுமே என்று நடிக்க படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றார். நடிகைக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்து மொத்த திரையுலகமுமே கொஞ்சம் பரிதவித்துப் போனதுதான். இப்படி இருக்கையில் படப்பிடிப்புத் தளத்தில் தொடர்ந்து அழுது கொண்டே இருந்த நடிகையை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வந்தால் தான் படப்பிடிப்பு சுமுகமாக முடியும். இதனால் நடிகரோ நடிகையிடம் மெல்ல மெல்ல பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தார்.

ஆறுதல் நெருக்கம்: அதுவும் நடிகை தனது மனதில் இருக்கும் மொத்த பாரத்தையும் இறக்கி வைக்கும் அளவுக்கு நடிகர் தனது பேச்சை வளர்த்துள்ளார். இது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்றது தான் என்றாலும், ஒரு பெரிய சோகத்தில் இருந்து நடிகை மொத்தமாக விலகி உள்ளார். இப்படி இருக்கையில், ஒரு கட்டத்தில் நடிகைக்கும் நடிகருக்கும் இடையில் நட்பைக் கடந்து நல்ல உறவு ஏற்படவே, இருவரும் முதலில் கொஞ்ச நாட்கள் டேட்டிங் சென்று பார்த்துள்ளார்கள். இருவருக்கும் ஒத்துப் போகவே, இருவருமே காதல் வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

விரைவில் திருமணம்: இவர்கள் இருவரும் காதலில் இருக்கிறார்கள் என்ற பேச்சுக்கள் அடிக்கடி வந்தாலும், இருவரும் அதை மறுக்காமல் லாவகமாக கடந்து சென்றுள்ளார்கள். இப்படி இருக்கையில் நடிகைக்கும் நடிகருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக பேச்சுக்கள் தொடர்ந்து திரைத்துறையில் அடிபட்டு வருகிறது. இதைக் கேள்விப்பட்ட பலரும் காதல் பிரிவில் இருந்த நடிகைக்கு ஆறுதல் சொல்கிறேன் என்று சென்ற நடிகர், கடைசியில் நடிகையை உஷாராக்கிவிட்டாரே என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X