காதலரை பிரிந்த சீரியல் நடிகைக்கும், ரீல் கணவருக்கும் இடையே காதலாமே?
Recommended Video

சென்னை: சீரியலில் கணவன் மனைவியாக நடித்து வரும் இருவருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெரிய எஜமான் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனலில் வரும் சீரியல் மூலம் பிரபலமானவர் அந்த பப்ளி நடிகை. முதல் சீரியல் மூலமே அவர் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.
அவரும், அவர் பெயரில் ஒரு பாதி பெயரை கொண்ட நடன கலைஞரும் காதலித்து வந்தனர். இதை அம்மணியே பேட்டியில் தெரிவித்தார்.

பிரச்சனை
நடன கலைஞருக்கும், பப்ளி நடிகைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். முன்னதாக அந்த நடன கலைஞர் அம்மணியின் காதலை ஏற்கவே யோசித்தாராம்.

மீண்டும் காதல்
பப்ளி நடிகைக்கும் அவர் நடித்து வரும் சீரியலில் அவருக்கு கணவராக நடிக்கும் நடிகருக்கும் இடையே ஃபீலிங்ஸ் ஏற்பட்டுள்ளதாம். இருவரும் காதலிப்பதாக சின்னத்திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

பரிசு
பப்ளி நடிகையின் பிறந்தநாள் அன்று 20க்கும் மேற்பட்ட பரிசுகளை வாங்கி நாள் முழுவதும் அவருக்கு கொடுத்து சர்பிரைஸ் அளித்து அசத்திவிட்டாராம் நடிகர்.

தாக்குதல்
நடிகைக்கும் உதவி இயக்குனர் ஒருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் தலையிட்ட அந்த நடிகர் அம்மணிக்கு ஆதரவாக பேசியதுடன் உதவி இயக்குனரை தாக்கிவிட்டாராம். காதல் இல்லாமலா இவ்வளவும் செய்கிறார் நடிகர் என்று கேள்வி எழுந்துள்ளது.

திருமணம்
சீரியலில் நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது ஒன்றும் புதிது இல்லையே. சரி, இந்த காதல் திருமணம் வரை செல்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











