அட என்னப்பா.. டாப் நடிகருக்கு வந்த இப்படியொரு சோதனை? குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை: மச்சான் நடிகர் நடிப்பில சமீபத்துல வெளியாகி இருக்க அந்த சாதிய படத்தால அந்த டாப் நடிகருக்கு புதுப் பிரச்சனை ஒண்ணு கிளம்பியிருக்காம்.

மனைவியோட தம்பி படம் என்பதால், டாப் நடிகர் அந்த படத்தை பார்த்து பாராட்டியதாக சமூக வலைதளத்தில் புதிய தகவல் வைரலாக பரவி வருவது தான் அந்த பிரச்சனை.

ஏற்கனவே கெத்து காட்டும் ஊர்காரராக அந்த டாப் நடிகரும் நடிச்சிட்டு வரதால, அவரும், இந்த படத்துக்கு ஆதரவு தெரிவிச்சதாகவும் கிளப்பி விடுறாங்க.. இதனால அவர் மட்டும் இல்லாம அவரது ரசிகர்களும் குழம்பி போயிருக்காங்களாம்.

டாப் நடிகரின் மச்சான்

டாப் நடிகரின் மச்சான்

சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் கார சார சர்ச்சையை கிளப்பியிருக்கும் அந்த சாதிய படத்தின் ஹீரோ யாருன்னா அந்த டாப் நடிகரின் மனைவியின் தம்பி தான். ரொம்ப வருஷத்துக்கு, முன்னாடியே மாமா தயாவால ஹீரோவான அவர், உருப்படியா எந்த ஒரு ஹிட் படத்திலும் நடிக்கவில்லை.

முடியவே முடியாது

முடியவே முடியாது

பெருசா நடிப்பு திறமை ஏதும் இல்லாததால், ஃபீல்ட் அவுட் ஆகி இருந்த அந்த நடிகருக்கு, அக்கா நடிகை பல முறை சிபாரிசு செய்தும் அந்த டாப் நடிகர் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு முறை தான் வாய்ப்பு தேடி தர முடியும், ஒவ்வொரு முறையும் ஊட்டி விட முடியாது என டாப் நடிகரும் கை விரித்துள்ளார்.

இதுதான் சாக்கு

இதுதான் சாக்கு

மார்க்கெட்டே காலியான நிலையில், பல வருடங்கள் சும்மா இருந்த அந்த நடிகருக்கு, இப்படி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், நடிக்க ஒப்புக் கொண்டார். இதுதான் சாக்குன்னு அந்த படத்திற்கு பல அரசியல் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து, தாங்கள் யார் என்ற உண்மையான முகத்தை பொது வெளியில் ஓப்பனாக காட்டி வருகின்றனர்.

படம் பார்த்தார்

படம் பார்த்தார்

தனது மச்சான் நடிகர் படத்தை அந்த டாப் நடிகர் பார்த்திருக்க மாட்டாரா? அதெல்லாம் நிச்சயம் பார்த்திருப்பார் என்றும், படத்தின் புரொமோஷனுக்காக இப்படி கிளப்பி விடுவோம் என படக்குழுவும், டாப் நடிகர் படத்தை பார்த்தார், பிரமாதம் என்று சொன்னார் என கிளப்பி விட, அதுவும் காட்டுத் தீயாய் பரவி, அந்த நடிகரின் காதுக்கே சென்றுள்ளது.

சங்கடம்

சங்கடம்

மனைவியின் தம்பி என்பதால், இந்த விஷயத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல், குழம்பி போய் சங்கடமான மன நிலையில், அந்த டாப் நடிகர் இருக்கிறாராம். ஏற்கனவே சில அரசியல் கட்சிகள், அந்த நடிகரின் பெயரை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தற்போது, சாதிய படத்துக்கு டாப் நடிகர் ஆதரவு என்ற புதிய சோதனை கிளம்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X